*குரல் பதிவு எனும் எளிய தொழில்நுட்பம்*
தான் கற்றதை வெளிப்படுத்துவதன் மூலம் கற்றல் வலுப்படுகிறது; மேலும் பலவற்றைக் கற்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்குகிறது. அதுவும் குறிப்பாக, Audioவாக பதிவு செய்தல் என்ற எளிய தொழில்நுட்பத்தால் பேச்சாற்றல், வாசிப்புத் திறன் மேம்படுகிறது.
மாணவர்கள் குரல்களை பதிவு செய்வதால் அவர்களிடம் ஆர்வம் ஏற்பட்டு, தன்னார்வமாகப் பங்கேற்பர். [கற்றலில் இனிமை, கற்பித்தலில் புதுமை]
• தனது குரலைத் தானே கேட்கும் போது மனமகிழ்ச்சி அடைவர். மேலும் தனது பேச்சில் உள்ள கருத்துப் பிழையை அடையாளம் காண்பர். [சுயமதிப்பீடு]
• வாசித்தல் திறன் & பேச்சாற்றலை திறன் மேம்படுகிறது, கற்றல் வலுப்படுகிறது. எண்ணும் எழுத்தும் திட்டத்திலுள்ள என் மேடை என் பேச்சு, வானவில் மேடை, நானே பேசுவேன் I Can போன்ற பகுதிகளில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். மாணவர்கள் எளிமையாக செய்ய
• மாணவர்களின் குரல் பதிவுகளை, இணைய பக்கங்களில் பதிவேற்றி வைப்பதன் மூலம், கல்வி அலுவலர்களும், பெற்றோர்களின் எங்கிருந்தும், எப்போதும் கேட்கலாம். அவர்களின் கற்றல் நிலையினை அளவிடலாம்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவையாக, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சியாக தொடர்ச்சியாக பயணித்துவருகிறோம்.
ஏதேனும் சந்தேகம் எனில்
மாலை 6:00 மணிக்கு மேல்
தொடர்பு கொள்ளவும்..
79041 63487