
சமூகப் பொறுப்புள்ள ஒரு குடிமகனாக, உச்சநிலையிலான நிச்சயமற்ற தன்மை மற்றும் தனிமைப்படுத்தலை நாம் எதிர்கொள்கின்ற இந்தச் சமயத்தில் உங்கள் வணிகம் இன்னும் சவாலானதாக இருக்கக்கூடும். WhatsApp இல் உங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருங்கள்—இதைத்தான் மக்கள் தங்களின் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தொடர்பில் இருக்கப் பயன்படுத்துகின்றனர்.
உங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளும்போது WhatsApp-ஐப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துங்கள். உங்களுக்குத் தெரிந்த மற்றும் உங்களிடமிருந்து மெசேஜ்களைப் பெற விரும்புகின்றவர்களுக்கு மட்டுமே தகவல் அனுப்பிடுங்கள். உங்கள் மொபைல் எண்ணைத் தங்களின் முகவரிப் புத்தகத்தில் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். மேலும் தானியங்குத் தகவல்கள் அல்லது விளம்பரத் தகவல்களைக் குழுக்களில் பகிர வேண்டாம். இந்த எளிமையான சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பது, பிற பயனர்களின் புகார்களுக்கு வழிவகுத்து கணக்கைத் தடை செய்யும் படி செய்துவிடலாம்.
பல்வேறு கேள்விகளைச் சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கும், உங்கள் வணிக விவரத்தில் உதவிகரமான தகவல்களைக் காட்சிப்படுத்துவதற்கும், கேட்டலாகில் உங்கள் சேவைகள் குறித்த விவரங்களைப் பகிர்வதற்கும், இலவசமாகத் தரவிறக்க இயலுகின்ற WhatsApp Business செயலியைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம். WhatsApp Business செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த படிப்படியான வழிகாட்டலுக்கு, இங்கே கிளிக் செய்க. உங்கள் கணக்கை WhatsApp Messenger செயலியில் இருந்து WhatsApp Business செயலிக்கு மாற்ற விரும்பினால், இங்கே கிளிக் செய்க.
உங்கள் மொபைலுக்குத் தரவிறக்குங்கள்
உங்களுடன் WhatsApp அரட்டையைத் தொடங்குவதற்கு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் ஒரு குறு இணைப்பை உருவாக்கிடுங்கள். உங்கள் மின்னஞ்சல், இணையதளம், Facebook பக்கம் அல்லது அடிக்கடி பயன்படுத்துகின்ற பிற ஊடகங்களின் மூலம் இணைப்பைப் பகிர்ந்திடுங்கள்.
வணிக நேரங்களில் செய்யப்படுகின்ற மாற்றங்கள் குறித்து உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்திடுங்கள். உங்கள் வணிகம் திறந்திருக்கும் நாட்கள் மற்றும் நேரத்தைக் காட்சிப்படுத்த, வணிக விவரத்தைப் பயன்படுத்தவும்.
கிடைக்கப்பெறுகின்ற தயாரிப்புகளின் நிலையை வாடிக்கையாளர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்திடுங்கள். குழுக்கள் அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் முன்னணி வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருங்கள். மேலும் உங்கள் கையிருப்பு நிலை குறித்து வாடிக்கையாளர் அறிந்துகொள்வதற்கு கேட்டலாகைப் புதுப்பியுங்கள்.
மறையாக்கம் செய்யப்பட்ட காணொலி மற்றும் குரல் அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு அவர்கள் நேரில் பெறும் அதே சேவையை வழங்கிடுங்கள்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும்போது, கடையின் பிக்அப்கள் மற்றும் டெலிவரிகளின் மூலம் விற்பனையை அதிகரிக்கலாம். டெலிவரி முகவரிக்குச் செல்லும்போது, WhatsApp-இல் இருப்பிட நேரலை அம்சத்தை ஆன் செய்திடுங்கள். இந்த அம்சத்தின் மூலம் வாடிக்கையாளர்களுடன் உங்கள் இடத்தைப் பகிர்ந்து, விரைவான மற்றும் எளிதான டெலிவரியை உறுதிசெய்ய முடியும்.
வாடிக்கையாளர்கள் உங்கள் கடைக்கு வருகை தருகின்ற ஒவ்வொரு முறையும் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளீர்களா? ஸ்டேட்டஸ் புதுப்பிப்பு அம்சம் மூலம் உங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்திடுங்கள்.
குழுக்கள் மற்றும் குழு காணொலி அழைப்புகளைப் பயன்படுத்தி தொலைவில் இருந்து கலந்துரையாடுங்கள்.
WhatsApp கொரோனா வைரஸ் தகவல் மையம் தொடர்பான கேள்விகள் இருந்தால், எங்களைத் தொடர்புகொள்ளவும்.