1. WhatsApp Business செயலியைத் தரவிறக்கிவிட்டு, அதைத் திறக்கவும்: WhatsApp Business செயலியை Google பிளே ஸ்டோர் மற்றும் Apple App Store இல் இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். முகப்புத் திரையில் WhatsApp Business ஐகானைத் தட்டவும்.
2. சேவை விதிமுறைகளைப் படிக்கவும்: WhatsApp Business சேவை விதிமுறைகளைப் படித்து, அவற்றை ஏற்பதற்கு 'ஒப்புதலளித்து தொடரவும்' என்பதைத் தட்டவும்.
3. பதிவு செய்யவும்: உங்கள் நாட்டின் குறியீட்டைச் சேர்ப்பதற்கு, பட்டியலில் இருந்து உங்கள் நாட்டைத் தேர்ந்தெடுத்து பிறகு, சர்வதேச மொபைல் எண் வடிவமைப்பில் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும். அதன் பின்பு, முடிந்தது அல்லது அடுத்து என்பதைத் தட்டி, SMS வழியாகவோ கைபேசி அழைப்பின் வழியாகவோ 6 இலக்கக் குறியீட்டைப் பெறுவதற்கு, சரி என்பதைத் தட்டவும். பதிவு செய்தலை முடிப்பதற்கு, 6 இலக்கக் குறியீட்டை உள்ளிடவும். உங்கள் கைபேசி எண்ணை எவ்வாறு பதிவுசெய்வது என்பது குறித்து தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.
4. தொடர்புகள் மற்றும் புகைப்படங்களுக்கான அணுகலை அனுமதிக்கவும்: உங்கள் மொபைலின் தொடர்புப் புத்தகத்தில் இருந்து WhatsApp Business செயலியில் தொடர்புகளைச் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் மொபைலில் உள்ள புகைப்படங்கள், காணொலிகள் மற்றும் கோப்புகளை அணுகுவதற்கான அனுமதியையும் நீங்கள் வழங்கலாம்.
5. கணக்கை உருவாக்கவும்: உங்கள் பிசினஸின் பெயரை உள்ளிட்டு, பிசினஸ் வகையைத் தேர்ந்தெடுத்து, சுயவிவரப் படத்தைத் தேர்வு செய்யவும்.
6. உங்கள் பிசினஸ் விவரத்தை உருவாக்கவும்:உலாவு > பிசினஸ் விவரம் என்பதைத் தட்டவும். பிசினஸ் முகவரி, விவரம், வேலை நேரம் மற்றும் இன்னும் பல முக்கியமான பிசினஸ் தகவல்களை நீங்கள் இங்கே சேர்க்கலாம்.
7. அரட்டையைத் தொடங்கவும். உங்கள் பிசினஸ் விவரம் அமைக்கப்பட்டுவிட்டது. அல்லது -ஐத் தட்டி, தகவலைத் தேடவும் அல்லது தொடர்பைத் தேர்ந்தெடுக்கவும். உரைப் புலத்தில் உங்கள் செய்தியை உள்ளிடவும். பிறகு, அல்லது -ஐத் தட்டவும்.
உங்கள் பிசினஸைத் திறம்பட நடத்துவதற்குத் தேவையான உதவிகரமான பல கருவிகள் WhatsApp Business செயலியில் உள்ளன. இந்தக் கருவிகளைப் பார்ப்பதற்கு, அரட்டைகள் திரைக்குச் செல்லவும். Android-இல் மேலும் விருப்பங்கள் அல்லது iPhone-இல் அமைப்புகள் என்பதைத் தட்டவும். அதன் பிறகு, பிசினஸ் கருவிகள் என்பதைத் தட்டவும்.