1. செயலியைத் தரவிறக்கிவிட்டு, அதைத் திறக்கவும்: Google Play ஸ்டோர் அல்லது Apple App Store இல் இருந்து இலவசமாக WhatsApp Messenger-ஐத் தரவிறக்கவும். செயலியைத் திறப்பதற்கு, முகப்புத் திரையில் WhatsApp ஐகானைத் தட்டவும்.
2. சேவை விதிமுறைகளைப் படிக்கவும்: சேவை விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கையையும் படித்த பிறகு, அவற்றை ஏற்க ஏற்கிறேன் மற்றும் தொடர்க என்பதைத் தட்டவும்.
3. பதிவுசெய்யவும்: கீழ் தோன்றும் பட்டியலில் இருந்து உங்கள் நாட்டைத் தேர்ந்தெடுத்து, உங்கள் நாட்டின் குறியீட்டையும் சர்வதேச கைபேசி எண் வடிவமைப்பில் உங்கள் கைபேசி எண்ணையும் உள்ளிடவும். அதன் பின்பு, முடிந்தது அல்லது அடுத்து என்பதைத் தட்டி, SMS வழியாகவோ கைபேசி அழைப்பின் வழியாகவோ 6 இலக்கக் குறியீட்டைப் பெறுவதற்கு, சரி என்பதைத் தட்டவும். பதிவு செய்தலை முடிப்பதற்கு, 6 இலக்கக் குறியீட்டை உள்ளிடவும். Android, iPhone அல்லது KaiOS-இல் உங்கள் கைபேசி எண்ணைப் பதிவுசெய்வது எவ்வாறு என்பதைத் தெரிந்துகொள்ளவும்.
4. உங்கள் சுயவிவரத்தை அமைக்கவும்: உங்கள் புதிய சுயவிவரத்தில் உங்கள் பெயரை உள்ளிட்டு பிறகு அடுத்து என்பதைத் தட்டவும். சுயவிவரப்படத்தையும் நீங்கள் சேர்க்கலாம்.
5. தொடர்புகள் மற்றும் புகைப்படங்களுக்கான அணுகலை அனுமதிக்கவும்: உங்கள் கைபேசியின் முகவரிப் புத்தகத்தில் இருந்து WhatsApp-இல் தொடர்புகளைச் சேர்த்துக் கொள்ளலாம். கைபேசியிலுள்ள புகைப்படங்கள், காணொலிகள் மற்றும் கோப்புகளை அணுகுவதற்கான அனுமதியையும் நீங்கள் வழங்கலாம்.
6. அரட்டையைத் தொடங்கவும்: அல்லது -ஐத் தட்டி, தொடங்குவதற்கு ஒரு தொடர்பைத் தேடவும். உரைப் புலத்தில் உங்கள் செய்தியை உள்ளிடவும். படங்கள் அல்லது வீடியோக்களை அனுப்ப, உரைப் புலத்திற்கு அடுத்துள்ள அல்லது -ஐத் தட்டவும். புதிய புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க கேமராவைத் தேர்வுசெய்யவும் அல்லது உங்கள் கைபேசியில் இருந்து ஏற்கெனவே இருக்கும் படம் அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்க கேலரிஅல்லது படம் மற்றும் வீடியோ லைப்ரரியைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு அல்லது -ஐத் தட்டவும்.
7. குழுவை உருவாக்கவும்: 256 பேர்வரை கொண்ட ஒரு குழுவை நீங்கள் உருவாக்கலாம். அல்லது -ஐத் தட்டி புதிய குழுவைத் தட்டவும். தொடர்புகளைத் தேடவோ தேர்ந்தெடுக்கவோ செய்து குழுவில் சேர்த்து, அடுத்து என்பதைத் தட்டவும். குழுப் பெயரை உள்ளிட்டு அல்லது உருவாக்கு என்பதைத் தட்டவும்.
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களைத் தனிப்பயனாக்குதல்
WhatsApp உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் புரிந்துகொள்வதையும் தனிப்பயனாக்குவதையும் எளிதாக்குகிறது. எங்கள் தனியுரிமைப் பக்கத்தில் மேலும் தெரிந்துகொள்ளவும்.
நீங்கள் பெறும் தகவல்களின் உண்மை நிலையைச் சரிபார்த்தல்
நீங்கள் பெறும் தகவல்கள் அனைத்தும் துல்லியமானவை அல்ல என்பதால் நீங்கள் பெறும் தகவல்கள் உண்மையானவையா என்பதைப் பாருங்கள். உங்களுக்கு அனுப்பப்பட்ட தகவலை யார் அனுப்பியுள்ளார் என்று தெரியாத பட்சத்தில், நம்பகமான உண்மைச் சரிபார்ப்பு அமைப்புகளுடன் தகவலை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்க்கவும். தவறான தகவல் பரப்பப்படுவதைத் தடுப்பது எவ்வாறு என்பதை இந்தக் கட்டுரையில் மேலும் தெரிந்துகொள்ளவும்.
முன்னனுப்பப்படும் தகவல்கள்
தவறான தகவல்கள் பரவலைத் தடுக்க, தகவல்களை எவ்வாறு முன்னனுப்பலாம் என்பதைக் கட்டுப்படுத்துகிறோம். முன்னனுப்பப்படும் தகவல்களில் முன்னனுப்பப்பட்டது எனும் லேபில் இருப்பதால் எளிதாக அந்தத் தகவல்களை அடையாளம் காணலாம். ஒரு தகவல் பலமுறை முன்னனுப்பப்பட்டிருந்தால், அந்தத் தகவலுக்கு அருகில் இரட்டை அம்புக்குறி கொண்ட ஐகான் குறிக்கப்பட்டு இருக்கும். முன்னனுப்பப்படும் வரம்புகள் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.