இலாப நோக்கற்ற அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
உச்சநிலையிலான நிச்சயமற்ற தன்மை மற்றும் தனிமைப்படுத்தலை நாம் எதிர்கொள்கின்ற இந்தச் சமயத்தில், WhatsApp மூலம் உங்கள் சமூகத்துடன் தொடர்பில் இருங்கள்—இதைத்தான் மக்கள் தங்களின் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தொடர்பில் இருக்கப் பயன்படுத்துகின்றனர்.
உங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளும்போது WhatsApp-ஐப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துங்கள். உங்களுக்குத் தெரிந்த மற்றும் உங்களிடமிருந்து மெசேஜ்களைப் பெற விரும்புகின்றவர்களுக்கு மட்டுமே தகவல் அனுப்பிடுங்கள். உங்கள் மொபைல் எண்ணைத் தங்களின் முகவரிப் புத்தகத்தில் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். மேலும் தானியங்கு மெசேஜ்கள் அல்லது விளம்பர மெசேஜ்களைக் குழுக்களில் பகிர வேண்டாம். இந்த எளிமையான சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பது, பிற பயனர்களின் புகார்களுக்கு வழிவகுத்து கணக்கைத் தடை செய்யும் படி செய்துவிடலாம்.
பல்வேறு கேள்விகளைச் சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கும், வணிக விவரத்தில் உதவிகரமான தகவல்களைக் காட்சிப்படுத்துவதற்கும், கேட்டலாகில் உங்கள் சேவைகள் குறித்த விவரங்களைப் பகிர்வதற்கும், இலவசமாகத் தரவிறக்க இயலுகின்ற WhatsApp Business செயலியைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம். WhatsApp Business செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த படிப்படியான வழிகாட்டலுக்கு, இங்கே கிளிக் செய்க. உங்கள் கணக்கை WhatsApp Messenger செயலியில் இருந்து WhatsApp Business செயலிக்கு மாற்ற விரும்பினால், இங்கே கிளிக் செய்க.
உங்கள் மொபைலுக்குத் தரவிறக்குங்கள்