மருத்துவப் பணியாளர்கள்
உச்சநிலையிலான நிச்சயமற்ற தன்மை மற்றும் தனிமைப்படுத்தலை நாம் எதிர்கொள்கின்ற இந்தச் சமயத்தில், உங்கள் நோயாளிகள் மற்றும் சகஊழியர்களுடன் WhatsApp மூலம் தொடர்பில் இருக்கலாம். இதைத்தான் மக்கள் தங்களின் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தொடர்பில் இருக்கப் பயன்படுத்துகின்றனர்.
உங்கள் நோயாளிகளுடன் தொடர்பு கொள்ளும்போதுWhatsApp-ஐப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துங்கள். உங்களுக்குத் தெரிந்த மற்றும் உங்களிடமிருந்து தகவல்களைப் பெற விரும்புகின்ற நபர்களுக்கு மட்டுமே தகவல் அனுப்பிடுங்கள். உங்கள் மொபைல் எண்ணைத் தங்களின் முகவரிப் புத்தகத்தில் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். மேலும் தானியங்குத் தகவல்கள் அல்லது விளம்பரத் தகவல்களை குழுக்களில் பகிர வேண்டாம். இந்த எளிமையான சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பது, பிற பயனர்களின் புகார்களுக்கு வழிவகுத்து கணக்கைத் தடை செய்யும் படி செய்துவிடலாம்.
பல்வேறு கேள்விகளைச் சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கும், வேலை நேரங்கள் மற்றும் பணி தொடர்பாக அடிக்கடி பயன்படுத்தும் பதில்கள் போன்ற உதவிகரமான தகவல்களை உங்கள் வணிக விவரத்தில் காட்சிப்படுத்துவதற்கும், WhatsApp Business செயலியைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம். இதை இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். WhatsApp Business செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த படிப்படியான வழிகாட்டலுக்கு, இங்குக் கிளிக் செய்க. உங்கள் கணக்கை WhatsApp Messenger செயலியில் இருந்து WhatsApp Business செயலிக்கு மாற்ற விரும்பினால், இங்குக் கிளிக் செய்க.
உங்கள் மொபைலுக்குத் தரவிறக்குங்கள்
*எந்தவொரு WhatsApp பயன்பாடும் மருத்துவச் சேவைத் தரவின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புச் சட்டங்கள் உட்பட பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணக்கமாக இருப்பதை உறுதி செய்வது ஒவ்வொரு WhatsApp பயனரின் பொறுப்பாகும். WhatsApp எந்தவொரு மருத்துவச் சேவைகளையும் ஏற்பாடு செய்யவோ, வழங்கவோ செய்யாது. மேலும் உங்கள் மருத்துவச் சேவை நடைமுறையுடன் WhatsApp இணைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் குறிப்பிடக்கூடாது. நோயாளிகளுடனான தனிப்பட்ட மருத்துவ ஆலோசனைகளுக்கோ, உடனடி மருத்துவக் கவனிப்பு தேவைப்படும் நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கோ WhatsApp ஒரு மாற்று கிடையாது. மேலும் இதை ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட மருத்துவச் சாதனமாகப் பயன்படுத்தக்கூடாது.