1. உங்கள் WhatsApp Messenger கணக்கைக் காப்பெடுக்கவும்: WhatsApp Messenger கணக்கில் இருந்து WhatsApp Business கணக்கிற்கு நீங்கள் மாறுவதாக இருந்தால், காப்பெடுக்குமாறு பரிந்துரைக்கிறோம். காப்பெடுக்காமல் இருந்தால், உங்கள் அரட்டை வரலாற்றை நீங்கள் இழக்க நேரிடும். WhatsApp Messenger-ஐத் திறக்கவும். Android-இல் -ஐத் தட்டி அமைப்புகள் என்பதைத் தட்டவும். iPhone என்றால், உங்கள் அரட்டைகள் திரையில் அமைப்புகள் என்பதைத் தட்டவும். அமைப்புகளில், அரட்டைகள், அரட்டைக் காப்பெடுத்தல், காப்பெடு அல்லது இப்போதே காப்பெடு என்பதைத் தட்டவும். காப்பெடுப்பு நிறைவடைந்த பிறகு, அடுத்தப் படிக்குச் செல்லவும்.
2. WhatsApp Business செயலியைத் தரவிறக்கிவிட்டு, அதைத் திறக்கவும்: \WhatsApp Business செயலியை Google Play ஸ்டோர் மற்றும் Apple App Store இல் இருந்து இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். முகப்புத் திரையில் WhatsApp Business ஐகானைத் தட்டவும்.
3. சேவை விதிமுறைகளைப் படிக்கவும்: WhatsApp Business சேவை விதிமுறைகளைப் படித்து, அவற்றை ஏற்பதற்கு 'ஒப்புதலளித்து தொடரவும்' என்பதைத் தட்டவும்.
4. பதிவு செய்யவும்: WhatsApp Messenger-இல் நீங்கள் பயன்படுத்துகின்ற மொபைல் எண்ணை WhatsApp Business தானாகவே கண்டறியும். தொடர்வதற்கு, உங்கள் பிசினஸ் எண்ணைக் கொண்ட விருப்பத்தேர்வைத் தட்டவும்.
5. கணக்கைப் பரிமாற்றவும்: கணக்குப் பரிமாற்றம் நிறைவு செய்யப்படும் வரை, WhatsApp Business செயலியைத் திறந்த நிலையிலும், உங்கள் மொபைலை இயக்கத்திலும் வைக்கவும். பரிமாற்றம் தானாக நடக்கின்ற அதேசமயத்தில், உங்கள் காப்பெடுப்பில் இருந்து மீட்டெடுப்பதற்கான அறிவுறுத்தலைப் பெறுவீர்கள். தொடர்க அல்லது மீட்டெடு என்பதைத் தட்டவும். அதன்பிறகு, அறிவுறுத்தப்படுகின்ற பட்சத்தில் அடுத்து என்பதைத் தட்டவும்.
6. தொடர்புகள் மற்றும் புகைப்படங்களுக்கான அணுகலை அனுமதிக்கவும்: உங்கள் மொபைலின் முகவரிப் புத்தகத்தில் இருந்து WhatsApp Business செயலியில் தொடர்புகளைச் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் மொபைலில் உள்ள புகைப்படங்கள், காணொலிகள் மற்றும் கோப்புகளை அணுகுவதற்கான அனுமதியையும் நீங்கள் வழங்கலாம்.
7. கணக்கை உருவாக்கவும்: உங்கள் பிசினஸின் பெயரை உள்ளிட்டு, பிசினஸ் வகையைத் தேர்ந்தெடுத்து, சுயவிவரப் படத்தைத் தேர்வு செய்யவும்.
8. உங்கள் பிசினஸ் விவரத்தை உருவாக்கவும்:உலாவு > பிசினஸ் விவரம் என்பதைத் தட்டவும். பிசினஸ் முகவரி, விவரம், வேலை நேரம் மற்றும் இன்னும் பல முக்கியமான பிசினஸ் தகவல்களை நீங்கள் இங்கே சேர்க்கலாம்.
9. அரட்டையைத் தொடங்கவும். உங்கள் பிசினஸ் விவரம் அமைக்கப்பட்டுவிட்டது. அல்லது -ஐத் தட்டி தகவலைத் தேடவும் அல்லது தொடர்பைத் தேர்ந்தெடுக்கவும். உரைப் புலத்தில் உங்கள் செய்தியை உள்ளிடவும். பிறகு அல்லது -ஐத் தட்டவும்.
உங்கள் பிசினஸைத் திறம்பட நடத்துவதற்குத் தேவையான உதவிகரமான பல கருவிகள் WhatsApp Business செயலியில் உள்ளன. இந்தக் கருவிகளைப் பார்ப்பதற்கு, அரட்டைகள் திரைக்குச் செல்லவும். Android இல் மேலும் விருப்பங்கள்என்பதை அல்லது iPhone இல் அமைப்புகள் என்பதைத் தட்டவும். அதன்பிறகு, பிசினஸ் கருவிகள் என்பதைத் தட்டவும்.