கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட தேதி: பிப்ரவரி 16, 2024
WhatsApp சேனல்கள் என்பது WhatsApp இல் உள்ள விருப்பத்திற்குரிய, ஒரு வழி பிராட்காஸ்ட்டிங் அம்சமாகும், இது தனிப்பட்ட முறையிலான மெசேஜிங்கிலிருந்து வித்தியாசமானது, மேலும் இது மக்கள் தங்களுக்கு முக்கியமான நபர்கள் மற்றும் நிறுவனங்களின் தகவலைப் பின்தொடர்வதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சேனல் நிர்வாகிகள் பின்வரும் வழிகாட்டுதல்களை (இந்த "சேனல்ககளின் வழிகாட்டுதல்களை") கவனத்தில் கொள்ள வேண்டும், அப்போதுதான் அவர்களின் அறிவிப்புகள் பொது பார்வையாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். WhatsApp சேனல்களைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பின்வருபவற்றை ஏற்கிறீர்கள்: இந்தச் சேனல்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் எங்களின் WhatsApp சேனல்களுக்கான துணைச் சேவை விதிமுறைகள்.
சேனல் நிர்வாகிகள் தங்களைப் பின்தொடர்பவர்களை மதிக்க வேண்டும், அதிகப்படியான அல்லது தரம் குறைந்த அறிவிப்புகளை அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும், இது பெறுநர்கள் தங்கள் சேனலைப் பின்தொடர்வதை நிறுத்துவதற்கு வழிவகுக்கும். சேனல் நிர்வாகிகள் தங்கள் சேனலுக்கு தலைப்பு வைக்க வேண்டும், அது சேனல் உள்ளடக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் பயனர்கள் எந்தச் சேனல்களைப் பின்தொடரத் தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பற்றி தகவலறிந்த தேர்வுகளைச் செய்ய உதவும் வகையிலும் இருக்க வேண்டும்.
பின்வரும் சேனல் வழிகாட்டுதல்களை மீறும் சேனல்களுக்கு எதிராக WhatsApp நடவடிக்கை எடுக்கக்கூடும்:
இந்தச் சேனல்களின் வழிகாட்டுதல்களை தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டறிய, தானியங்கு கருவிகள், மனித மதிப்பாய்வு மற்றும் பயனர் புகார்களைப் பயன்படுத்தி WhatsApp நடவடிக்கை எடுக்கக்கூடும். இந்தச் சேனல்களின் வழிகாட்டுதல்களை மீறக்கூடிய ஏதேனும் சேனல் அல்லது சேனலில் பகிரப்படும் குறிப்பிட்ட அறிவிப்புகள் பற்றி புகாரளிக்குமாறு பயனர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். WhatsApp இல் எவ்வாறு புகாரளிப்பது என்பது பற்றி இங்கே அறியலாம். சாத்தியமான அறிவுசார் சொத்துடைமை மீறல்களைப் புகாரளிப்பது பற்றிய தகவலுக்கு, இங்கே பார்க்கவும்.
தானியங்கு செயலாக்கம்
தானியங்கு தரவு செயலாக்கம் ஆனது எங்கள் மதிப்பாய்வு செயல்முறையின் மையமாகத் திகழுகிறது, மேலும் சேனல் உள்ளடக்கம் இந்தச் சேனல்களின் வழிகாட்டுதல்களை மீறும் வாய்ப்பு அதிகம் உள்ள சில பகுதிகளுக்கான முடிவுகளைத் தானியங்குபடுத்துகிறது.
தானியங்கு அமைப்பானது சரியான பொருள் மற்றும் மொழி நிபுணத்துவம் கொண்ட மனித மதிப்பாய்வாளர்களிடம் விதிகளை மீறக்கூடிய சேனல்களை கொண்டு செல்வதன் மூலம் மதிப்பாய்வுகளை முன்னுரிமைப்படுத்த உதவுகிறது, அப்போதுதான் எங்கள் குழுக்கள் மிக முக்கியமான நிகழ்வுகளின் மீது முதலில் கவனம் செலுத்த இயலும்.
மனித மதிப்பாய்வு குழுக்கள்
ஒரு சேனலுக்கு கூடுதல் மதிப்பாய்வு தேவைப்படும்போது, இறுதி முடிவை எடுப்பதற்காக எங்கள் தானியங்கு அமைப்புகள் அதை மனித மதிப்பாய்வுக் குழுவிற்கு அனுப்புகின்றன. எங்கள் மனித மதிப்பாய்வுக் குழுக்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர், இவர்கள் ஆழ்ந்த பயிற்சியைப் பெற்றுள்ளனர், மேலும் இவர்கள் பெரும்பாலும் சில கொள்கைப் பகுதிகள் மற்றும் பிராந்தியங்கள் குறித்து நிபுணத்துவம் பெற்றவர்களாக உள்ளனர். எங்கள் தானியங்கு அமைப்புகள் ஒவ்வொரு முடிவுகளிலிருந்தும் கற்றுக்கொண்டு மேம்பட்டு வருகின்றன.
உள்ளூர் சட்ட மீறல்கள்
நாங்கள் செயல்படும் நாடுகளில் உள்ள ஆணையங்களிடமிருந்து பெறும் செல்லுபடியாகும் சட்ட உத்தரவுகளை WhatsApp மதிப்பாய்வு செய்து பதிலளிக்கிறது. WhatsApp சேனல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவுகளையும் நாங்கள் பெறக்கூடும். எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன், அரசாங்கக் கோரிக்கையின் சட்டபூர்வமான தன்மையையும் முழுமைத்தன்மையையும் நாங்கள் எப்போதும் மதிப்பிடுகிறோம்.
சட்டவிரோத உள்ளடக்கம் அல்லது எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மீறுவது குறித்து நாங்கள் கண்டறியும்போது, உள்ளடக்கம் அல்லது மீறலின் தன்மையைப் பொறுத்து பின்வருபவை உள்ளிட்ட நடவடிக்கையை நாங்கள் எடுக்கக்கூடும்:
சட்ட விரோதமான உள்ளடக்கம் உட்பட எங்களின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மீறும் உள்ளடக்கத்தை நிர்வாகிகள் மீண்டும் மீண்டும் பதிவிட்டால், WhatsApp அவர்களின் சேனல்களை நிறுத்திவைத்துவிடும். சேனலை நிறுத்திவைப்பதற்கான முடிவு, விதியை மீறும் உள்ளடக்கத்தின் அளவு, தன்மை மற்றும் தீவிரம் மற்றும் கண்டுபிடிக்க முடிந்தால், பயனரின் உள்நோக்கம் ஆகியவற்றைப் பொறுத்திருக்கும்.
WhatsApp சேனல்களுக்கான துணை சேவை விதிமுறைகளில் காட்டப்பட்டுள்ளபடி கூடுதல் நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கக்கூடும்.
சேனல்களின் செயற்படுத்தம்: மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி, இந்தச் சேனல்களின் வழிகாட்டுதல்கள் உட்பட, சேனல்கள் எங்கள் விதிமுறைகள் அல்லது கொள்கைகளுக்கு எதிராக இருப்பதை நாங்கள் தீர்மானிக்கும்போது, அந்தச் சேனல்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கக்கூடும். நாங்கள் எடுத்த முடிவை நீங்கள் ஏற்கவில்லை என்றால், உங்கள் சேனல்களின் தகவல் பக்கத்திலிருந்து அந்த முடிவை எதிர்த்து நீங்கள் மேல்முறையீடு செய்யலாம். நீங்கள் இங்கே WhatsApp ஆதரவு மூலமும் மேல்முறையீட்டை சமர்ப்பிக்கலாம். எங்கள் முடிவு பிழையாக மேற்கொள்ளப்பட்டது என்று நாங்கள் தீர்மானித்தால், நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கையைத் திரும்பப் பெறுவோம்.
கணக்கு முடக்கம்: இந்தச் சேனல்களின் வழிகாட்டுதல்கள் அல்லது சேவை விதிமுறைகளை மீறியதற்காக உங்கள் கணக்கை நாங்கள் முடக்கினால், இங்கே விவரிக்கப்பட்டுள்ளபடி அந்த முடிவை எதிர்த்து நீங்கள் மேல்முறையீடு செய்யலாம்.
சேனல்களில் நாங்கள் எடுத்த ஒரு உள்ளடக்க முடிவை நீங்கள் ஏற்கவில்லை என்றால், மேலும் நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு பயனராக இருந்தால், சிக்கலைத் தீர்ப்பதற்காக சான்றளிக்கப்பட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இயங்கும் தகராறு தீர்வு அமைப்பு மூலம் நீங்கள் அந்த முடிவை எதிர்க்கலாம்.
பயனர் புகார்கள்: பிறரால் பதிவிடப்பட்ட உள்ளடக்கத்தை நீங்கள் புகாரளித்து, அந்த உள்ளடக்கம் எங்கள் விதிமுறைகள் அல்லது கொள்கைகளுக்கு எதிராக இல்லை என்று நாங்கள் கண்டறிந்தால், அது குறித்து நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம். நாங்கள் எடுத்த முடிவை நீங்கள் ஏற்கவில்லை என்றால், அந்த முடிவை எதிர்த்து நீங்கள் மேல்முறையீடு செய்யலாம். எங்கள் முடிவு பிழையாக மேற்கொள்ளப்பட்டது என்று நாங்கள் தீர்மானித்தால், நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கையைத் திரும்பப் பெறுவோம்.