நடைமுறைப்படுத்தப்பட்ட தேதி: மே 25, 2023
WhatsApp சேனல்கள் என்பது உங்களுக்கு WhatsApp வழங்கும் “சேவைகளில்” ஒன்றாகும். சேனல்களுக்கான இந்தத் துணைச் சேவை விதிமுறைகள் ("துணை விதிமுறைகள்") WhatsApp சேவை விதிமுறைகளுக்குத் துணையாக இருக்கும், அத்துடன் உங்கள் சேனல்களின் பயன்பாட்டிற்கும் பொருந்தும். இந்தத் துணை விதிமுறைகளுடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உங்கள் சேனல்களின் பயன்பாடுகளில் முன்னுரிமைப் பெற்று, அவற்றுக்குப் பயன்படுத்தப்படும். இந்தத் துணை விதிமுறைகளில் உள்ள எதுவும் WhatsApp சேவை விதிமுறைகள் அல்லது அவை குறிப்பிடும் கூடுதல் விதிமுறைகள் அல்லது கொள்கைகளின் கீழ் உள்ள எங்களின் எந்த உரிமையையும் கட்டுப்படுத்தாது.
WhatsApp சேனல்களின் தனியுரிமைக் கொள்கை ஆனது WhatsApp தனியுரிமைக் கொள்கைக்கு துணையாக இருக்கும், மேலும் நீங்கள் சேனல்களைப் பயன்படுத்தும்போது நாங்கள் எவ்வாறு தகவலைச் சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம் மற்றும் பகிர்கிறோம் என்பதை இது விளக்கும். நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் அமைப்புகளுக்குச் சென்று உங்கள் தனியுரிமைத் தேர்வுகளை மதிப்பாய்வு செய்யலாம். WhatsApp தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, நீங்கள் சேனல்களைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தனிப்பட்ட WhatsApp செய்திகளின் தனியுரிமையானது பாதிக்கப்படாது, அது தொடர்ந்து முழு மறையாக்கம் செய்யப்படும்.
சேனல்கள் என்பது ஒரு ஆதாரத்திலிருந்து பலருக்கு வழங்கப்படும் பிராட்காஸ்ட் சேவையாகும், இவை மற்ற WhatsApp பயனர்கள் பகிரும் தொடர்புடைய அறிவிப்புகளைப் சரியான நேரத்தில் பார்க்கவும் தொடர்பு கொள்ளவும் உங்களை அனுமதிக்கும். நீங்கள் ஒரு சேனலை உருவாக்கி அறிவிப்புகளைப் பகிரலாம், அதை எவரும் கண்டறியலாம், பின்பற்றலாம் மற்றும் பார்க்கலாம். சேனல்களில் நீங்கள் பகிரும் உள்ளடக்கம் WhatsApp மற்றும் எங்கள் பயனர்களுக்குத் தெரியும். உங்கள் நாடு அல்லது உள்ளூர் மொழியின் அடிப்படையில் நீங்கள் பின்தொடர விரும்பக்கூடிய சேனல்களையும் நாங்கள் பட்டியலிடலாம்.
நீங்கள் எங்கள் சேனல்களை சட்டப்பூர்வமான, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ஏற்கத்தக்க நோக்கங்களுக்காக மட்டுமே அணுக வேண்டும் மற்றும் பயன்படுத்த வேண்டும். சேனல் நிர்வாகிகள் தங்களில் சேனல்களில் இடம்பெறும் உள்ளடக்கத்திற்குப் பொறுப்பாவார்கள், மேலும் அவர்கள் தங்களின் சேனல்களைப் பின்தொடர்பவர்களுக்கு, வயதுக்கு ஏற்ற மற்றும் அவர்களுக்குப் பாதுகாப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் சேனல்களைப் பராமரிக்க வேண்டும். சேனல்களில் பயனர்கள் என்ன செய்கிறார்கள் அல்லது பேசுகிறார்கள் என்பதை நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம், மேலும் அவர்களின் (அல்லது உங்களின்) செயல்கள் அல்லது நடத்தைகள் (அது ஆன்லைனாக இருந்தாலும் அல்லது ஆஃப்லைனாக இருந்தாலும் சரி) அல்லது உள்ளடக்கம் (சட்டவிரோதமான அல்லது ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கம் உட்பட) ஆகியவற்றிற்கு நாங்கள் பொறுப்பல்ல.
WhatsApp சேனல்களின் வழிகாட்டுதல்கள் உட்பட மேலும் அது மற்றுமின்றி, எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்குப் பொருந்தும் இந்தத் துணை விதிமுறைகள் அல்லது பிற விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மீறும் செயலில் சேனல் நிர்வாகிகள் ஈடுபடக்கூடாது. இதில் அடங்குபவை:
WhatsApp பயனர்கள் தங்கள் உரிமைகள் அல்லது எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மீறக்கூடிய ஏதேனும் சேனல் அல்லது குறிப்பிட்ட அறிவிப்பு குறித்து புகாரளிக்கலாம். WhatsApp இல் எவ்வாறு புகாரளிப்பது மற்றும் தடுப்பது என்பது பற்றி இங்கே அறியலாம்.
WhatsApp சேவை விதிமுறைகள், இந்தத் துணை விதிமுறைகள், எங்கள் கொள்கைகள் (WhatsApp சேனல்கள் வழிகாட்டுதல்கள் உட்பட) ஆகியவற்றை மீறும் விதமாக சேனல்களில் பகிரப்படும் ஏதேனும் உள்ளடக்கம் அல்லது தகவலுக்கான அணுகலை WhatsApp அகற்றலாம், அவை பகிரப்படுவதைத் தடுக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம், அல்லது சட்டத்தின்படி அனுமதிக்கப்படும் இடத்தில் அல்லது செய்ய வேண்டிய இடத்தில் நாங்கள் இவ்வாறு செய்யலாம். எங்கள் சேவைகள் மற்றும் பயனர்களைப் பாதுகாக்க சில அம்சங்களுக்கான அணுகலை நாங்கள் அகற்றலாம் அல்லது கட்டுப்படுத்தலாம், கணக்கை முடக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது சட்ட அமலாக்கத்தைத் தொடர்புகொள்ளலாம். WhatsApp சேவை விதிமுறைகள் மற்றும் Whatsapp தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ளபடி, WhatsApp முழுவதும் பாதுகாப்பு, காபந்து மற்றும் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த, Meta நிறுவனங்கள் உட்பட மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுடன் நாங்கள் பணியாற்றலாம்.
மேலும் WhatsApp சேவை விதிமுறைகளுக்கு இணங்கும் விதமாக, முழுச் சேவைக்கான உங்கள் அணுகலை நிறுத்துவதற்கான உரிமையை WhatsApp கொண்டுள்ளது. எங்கள் கொள்கைகளை எல்லா அதிகார எல்லைகளிலும் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டாலும், சில அதிகார எல்லைகளில் பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் குறிப்பிட்ட தேவைகள் இருக்கலாம், இதற்குப் பல்வேறு அமலாக்கப் பயன்பாடுகள் தேவைப்படலாம்.
சேனல்களை வழங்குவதற்கு உங்களிடமிருந்து சில அனுமதிகள் எங்களுக்குத் தேவை. WhatsApp சேவை விதிமுறைகளில் (<Your License to WhatsAppயில்>) நீங்கள் எங்களுக்கு வழங்கும் உரிமத்தில் WhatsApp சேனல்களில் நீங்கள் பகிரும் உள்ளடக்கமும் அடங்கும்.
சேனல்களின் செயல்பாடு மற்றும்/அல்லது செயல்திறன் காலப்போக்கில் மாறலாம். நாங்கள் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தலாம், வரம்புகளை விதிக்கலாம், அணுகலை நிறுத்தி வைக்கலாம், நீக்கலாம், மாற்றலாம், கட்டுப்படுத்தலாம் அல்லது ஏற்கனவே உள்ள சில அம்சங்கள் அல்லது சேனல்களின் ஏதேனும் பகுதியைப் புதுப்பிக்கலாம். சேனல்களின் வரம்புகளுடைய பதிப்புகளை நாங்கள் வழங்கலாம், மேலும் இந்தப் பதிப்புகள் வரம்புகளுடனான அம்சங்களைக் கொண்டிருக்கலாம் அல்லது பிற வரம்புகளைக் கொண்டிருக்கலாம். ஓர் அம்சம் அல்லது உள்ளடக்கம் இனி இல்லாவிட்டால், அத்தகைய அம்சம் அல்லது உள்ளடக்கம் தொடர்பாக நீங்கள் உருவாக்கிய அல்லது வழங்கிய தகவல், தரவு அல்லது உள்ளடக்கம் நீக்கப்படலாம் அல்லது அணுக முடியாததாகிவிடலாம்.
இந்தத் துணை விதிமுறைகளை நாங்கள் திருத்தலாம் அல்லது புதுப்பிக்கலாம். எங்கள் துணை விதிமுறைகளில் பொருள் திருத்தங்கள் குறித்த அறிவிப்பை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம், மேலும் எங்கள் துணை விதிமுறைகளின் மேலே உள்ள “கடைசியாக மாற்றியமைக்கப்பட்ட” தேதியை புதுப்பிப்போம். சேனல்களின் உங்களுடைய தொடர்ச்சியான பயன்பாடு, திருத்தப்பட்டபடி எங்கள் துணை விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துகிறது. எங்கள் சேனல்களை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் திருத்தப்பட்டபடி எங்கள் துணை விதிமுறைகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால், நீங்கள் சேனல்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் அல்லது உங்கள் கணக்கை நீக்குவதன் மூலம் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.