15 அக்டோபர், 2024 அன்று செயலுக்கு வரும்
நீங்கள் ஃபேஸ் அண்ட் ஹேண்டு எஃபெக்ட்டுகளைத் தேர்வு செய்திருந்தால், இந்தத் தனியுரிமை அறிக்கை பொருந்தும். இந்தக் கேமரா எஃபெக்ட்டுகளை உருவாக்குவதற்கு உங்கள் தகவல்களை நாங்கள் பயன்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் விதம் குறித்து இது விளக்குகிறது, மேலும் இது WhatsApp தனியுரிமைக் கொள்கைக்கு துணையாக உள்ளது.
ஃபேஸ் அண்ட் ஹேண்டு எஃபெக்ட்டுகள் என்பன யதார்த்தத்தை மிகுவித்துக் காட்டும் அம்சங்களாகும், இவை காட்சியில் உள்ள மக்கள் நகருவது, பேசுவது மற்றும் பாவனைச் செய்கையில் ரியாக்ட் செய்யும். இவற்றுள் ஃபில்ட்டர்கள், மாஸ்க்குகள் மற்றும் பிற செயலை மேற்கொள்ளும் டிஜிட்டல் அனுபவங்கள் உள்ளிட்டவை அடங்கும். இந்த எஃபெக்ட்டுகளை உங்களது கேமரா, படங்கள் மற்றும் வீடியோக்களில் பயன்படுத்தலாம்.
ஃபேஸ் அண்ட் ஹேண்டு எஃபெக்ட்டுகளைப் பயன்படுத்தும்போது, அவற்றை உங்கள் கேமரா, படங்கள் மற்றும் வீடியோக்களில் சரியான இடத்தில் காண்பிக்க வேண்டும், மேலும் உங்கள் சைகைகள், பாவனைகள் அல்லது அசைவுகளுக்கு ரியாக்ட் செய்யும் விதமாக சில எஃபெக்ட்டுகளைச் செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் நாய்க்குட்டி காதுகளைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் தலையின் மேல் காதுகள் தோன்றுவதையும், நீங்கள் நகருகையில் அங்கேயே இருப்பதையும் நாங்கள் உறுதிசெய்ய வேண்டும். இதைச் செய்ய, உங்கள் முகப் பாகங்கள் (உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாய் போன்றவை) அமைந்திருக்கும் இடத்தையும் உங்கள் முகம், கண்கள் அல்லது கைகளில் உள்ள புள்ளிகள் அமைந்திருக்கும் இடத்தையும் நாங்கள் மதிப்பிடுவோம். சில எஃபெக்ட்டுகளுக்கு, இந்தப் புள்ளிகளை முகத்தின் பொதுவான மாதிரியில் பயன்படுத்தி, உங்கள் முகபாவனைகள் மற்றும் அசைவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அதைச் சரிசெய்வோம். உங்களை அடையாளம் காண இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படாது.
நாங்கள் இந்தத் தகவல்களைச் செயலாக்குவதோ எங்களது சர்வர்களில் சேமிப்பதோ மூன்றாம் தரப்பினருடன் பகிர்வதோ இல்லை. தகவல்கள் செயலாக்கப்படும், ஆனால் உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படாது, மேலும் நீங்கள் தேர்ந்தெடுத்த எஃபெக்ட்டைப் பயன்படுத்திய பிறகு நீக்கப்படும்.
நீங்கள் ஃபேஸ் அண்ட் ஹேண்டு எஃபெக்ட்டுகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் கேமரா ஃபீடு, படம் அல்லது வீடியோவில் தோன்றும் பிற நபர்களின் படங்களில் உள்ள தகவல்களை நாங்கள் செயலாக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, நீங்கள் வீடியோ அழைப்பில் எஃபெக்ட்டுகளைப் பயன்படுத்தும்போது, பின்னணியில் இருக்கும் ஒருவர் தனது தலையில் நாய்க்குட்டி காதுகளைக் கொண்டிருக்கலாம்.
நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால், WhatsApp இல் ஃபேஸ் அண்ட் ஹேண்டு எஃபெக்ட்டுகளை அணுகுவதற்கு முன், நீங்கள் அவற்றை இயக்க வேண்டும். WhatsApp இல் நீங்கள் முதன்முதலில் ஃபேஸ் அண்ட் ஹேண்டு எஃபெக்ட்டுகளைப் பயன்படுத்த முயலும்போது, எஃபெக்ட்டுகளை இயக்கும்படி உங்களிடம் கூறப்படும்.
உங்களது ஃபேஸ் அண்ட் ஹேண்டு எஃபெக்ட்டுகளின் அமைப்பை எந்த நேரத்திலும் மாற்றிக்கொள்ளலாம். இந்த அமைப்பு முடக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் பிற அம்சங்களை அணுகலாம்.
எஃபெக்ட்டுககளை இயக்குவதன் மூலம், உங்கள் கேமரா ஃபீடு, படம் அல்லது வீடியோவில் தோன்றும் அனைவரும் அவர்களது WhatsApp கணக்குகள் மூலம் எஃபெக்ட்டுகளை இயக்கியிருந்தால் மட்டுமே நீங்கள் எஃபெக்ட்டுகளைப் பயன்படுத்துவீர்கள் அல்லது நீங்கள் அவர்களின் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்து, அவர்கள் சார்பாக இந்த அறிவிப்பின் விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே நீங்கள் எஃபெக்ட்டுகளைப் பயன்படுத்துவீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.