கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட தேதி: பிப்ரவரி 16, 2024
WhatsApp என்பது மெசேஜ்களை அனுப்புவதற்கும் அழைப்புகளைச் செய்வதற்குமான எளிய, பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியாகும். இயல்நிலையாகவே முழு மறையாக்கம் செய்யப்பட்ட உங்களது தனிப்பட்ட மெசேஜ்களை யாராலும், ஏன் WhatsAppனாலும் கூட பார்க்க முடியாது.
இந்த மெசேஜிங் வழிகாட்டுதல்கள் (இந்த "வழிகாட்டுதல்கள்") 1:1 அரட்டைகள், அழைப்புகள், குழு அரட்டைகள் மற்றும் சமூகங்களுக்குப் பொருந்தும். இந்த வழிகாட்டுதல்கள் ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளுக்கும் பொருந்தும்.
WhatsApp Messenger செயலியின் பயன்பாடு பின்வருபவற்றின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது: எங்களது சேவை விதிமுறைகள் மற்றும் இந்த வழிகாட்டுதல்கள். WhatsApp Business செயலி மற்றும் WhatsApp Business தளம் உட்பட எங்கள் வணிகச் சேவைகளின் பயன்பாடு, இந்த வழிகாட்டுதல்களுக்கு மேலதிகமாக, WhatsApp Business சேவை விதிமுறைகள் மற்றும் வணிகக் கொள்கைகள் ஆகியவற்றின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
அடிப்படைக் கணக்கு, குழு மற்றும் சமூக சுயவிவரத் தகவல், அத்துடன் பிற பயனர்களால் புகாரளிக்கப்பட்ட மெசேஜ்கள் உட்பட WhatsApp செயலிக்குக் கிடைக்கும் வரையறுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் எங்கள் சேவை விதிமுறைகள் அல்லது இந்த வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக WhatsApp நடவடிக்கை எடுக்கக்கூடும். உங்களின் தனிப்பட்ட மெசேஜ்களும் அழைப்புகளும் எப்போதும் முழு மறையாக்கம் மூலம் பாதுகாக்கப்படும்.
இந்த வழிகாட்டுதல்களை மீறக்கூடிய WhatsApp தொடர்புகள், குழுக்கள், சமூகங்கள், ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகள் அல்லது குறிப்பிட்ட மெசேஜ்களைப் பயனர்கள் புகாரளிக்கலாம். WhatsApp இல் எவ்வாறு புகாரளிப்பது என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். சாத்தியமான அறிவுசார் சொத்துடைமை மீறல்களைப் புகாரளிப்பது பற்றிய தகவலுக்கு, இங்கே பார்க்கவும்.
WhatsApp ஆனது கணக்கு, குழு மற்றும் சமூக சுயவிவரத் தகவல், அத்துடன் புகாரளிக்கப்பட்ட மெசேஜ்கள், இந்த வழிகாட்டுதல்களின் சாத்தியமான மீறல்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து மதிப்பாய்வு செய்ய, தானியங்கு செயலாக்க நுட்பங்கள் மற்றும் மனித மதிப்பாய்வுக் குழுக்கள் இரண்டையும் பயன்படுத்தக்கூடும்.
தானியங்கு தரவு செயலாக்கம் ஆனது எங்கள் மதிப்பாய்வு செயல்முறையின் மையமாகத் திகழுகிறது, மேலும் கணக்கின் நடத்தை அல்லது புகாரளிக்கப்பட்ட மெசேஜ் உள்ளடக்கம் இந்த வழிகாட்டுதல்களை மீறும் வாய்ப்பு அதிகம் உள்ள சில பகுதிகளுக்கான முடிவுகளைத் தானியங்குபடுத்துகிறது.
தானியங்கு அமைப்பானது சரியான பொருள் மற்றும் மொழி நிபுணத்துவம் கொண்ட மனித மதிப்பாய்வாளர்களிடம் விதிகளை மீறக்கூடிய கணக்குகள், குழுக்கள் அல்லது சமூகங்களை கொண்டு செல்வதன் மூலம் மதிப்பாய்வுகளை முன்னுரிமைப்படுத்தவும் விரைவுபடுத்தவும் உதவுகிறது, அப்போதுதான் எங்கள் குழுக்கள் மிக முக்கியமான நிகழ்வுகளின் மீது முதலில் கவனம் செலுத்த இயலும்.
ஒரு கணக்கு, குழு அல்லது சமூகத்திற்கு கூடுதல் மதிப்பாய்வு தேவைப்படும்போது, இறுதி முடிவை எடுப்பதற்காக எங்கள் தானியங்கு அமைப்புகள் அதை மனித மதிப்பாய்வுக் குழுவிற்கு அனுப்புகின்றன. எங்கள் மனித மதிப்பாய்வுக் குழுக்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர், இவர்கள் ஆழ்ந்த பயிற்சியைப் பெற்றுள்ளனர், மேலும் இவர்கள் பெரும்பாலும் சில கொள்கைப் பகுதிகள் மற்றும் பிராந்தியங்கள் குறித்து நிபுணத்துவம் பெற்றவர்களாக உள்ளனர், கணக்குத் தகவல் மற்றும் புகாரளிக்கப்பட்ட மெசேஜ்களை மதிப்பாய்வு செய்யக்கூடியவராகவும் உள்ளனர். தனிப்பட்ட மெசேஜ்கள் முழு மறையாக்கம் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. எங்கள் தானியங்கு அமைப்புகள் ஒவ்வொரு முடிவுகளிலிருந்தும் கற்றுக்கொண்டு மேம்பட்டு வருகின்றன.
WhatsApp இல் உள்ள கணக்குகள், குழுக்கள் அல்லது சமூகங்கள் உள்ளூர் சட்டத்தை மீறுவதாக அரசாங்கங்கள் நம்பும் சூழலில், எங்களுக்குக் கிடைக்கும் கணக்குத் தகவலை மதிப்பாய்வு செய்யும்படி அவர்கள் கோரலாம். தனிப்பட்ட மெசேஜ்களும் அழைப்புகளும் எப்போதும் முழு மறையாக்கம் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. WhatsApp கணக்குகளைக் கட்டுப்படுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவுகளையும் நாங்கள் பெறக்கூடும். எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன், அரசாங்கக் கோரிக்கையின் சட்டபூர்வமான தன்மையையும் முழுமைத்தன்மையையும் நாங்கள் எப்போதும் மதிப்பிடுகிறோம்.
சட்டவிரோத உள்ளடக்கம் அல்லது எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மீறுவது குறித்து எங்களுக்குத் தெரியவந்தால், உள்ளடக்கம் அல்லது மீறலின் தன்மையைப் பொறுத்து பின்வருபவை உள்ளிட்ட நடவடிக்கையை நாங்கள் எடுக்கக்கூடும்:
WhatsApp சேவை விதிமுறைகளில் காட்டப்பட்டுள்ளபடி கூடுதல் நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கக்கூடும்.