WhatsApp சட்டத் தகவல்
நீங்கள் ஐரோப்பிய பிராந்தியத்தில் வசிப்பவர் என்றால், WhatsApp Ireland Limited ("WhatsApp," "எங்கள்," "நாங்கள்," அல்லது "எங்களுக்கு") இந்தச் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையின் கீழ் எங்கள் சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஐரோப்பிய பிராந்தியத்திற்கு வெளியே வசிப்பவர் என்றால், இந்த சேவைகளை WhatsApp LLC உங்களுக்கு வழங்குகிறது.
நாங்கள் Facebook நிறுவனங்களில் ஒன்றாவோம். எங்கள் தனியுரிமைக் கொள்கையானது ("தனியுரிமைக் கொள்கை") எங்கள் சேவைகளை வழங்க நாங்கள் செயலாக்கும் தகவல்கள் உட்பட எங்கள் தரவு நடைமுறைகளை விளக்க உதவுகிறது.
எடுத்துக்காட்டாக, எங்கள் தனியுரிமைக் கொள்கையானது, நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் மற்றும் இது உங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி பேசுகிறது. உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளையும் இது விளக்குகிறது - எடுத்துக்காட்டாக, வழங்கப்பட்ட மெசேஜ்களை நாங்கள் சேமிக்காத வகையில் எங்கள் சேவைகளை உருவாக்குவது, எங்கள் சேவைகள் மூலம் நீங்கள் யாருடன் தொடர்பு கொள்கிறீர்கள் என்பதன் கட்டுப்பாட்டை உங்களிடமே கொடுப்பது போன்றவை.
குறிப்பிடப்படாதவரை, இந்தத் தனியுரிமைக் கொள்கை எங்கள் எல்லா சேவைகளுக்கும் பொருந்தும்.
WhatsApp-இன் சேவை விதிமுறைகளை ("விதிமுறைகள்") படிக்கவும், இது நீங்கள் பயன்படுத்தும் மற்றும் நாங்கள் அளிக்கும் சேவைகளைப் பற்றிய விதிமுறைகளை விவரிக்கிறது.
மேலே செல்லவும்
முக்கிய புதுப்பிப்புகள்
உங்கள் தனியுரிமைக்கான மதிப்பு எங்கள் DNA இல் குறியிடப்பட்டுள்ளது. நாங்கள் WhatsApp-ஐத் தொடங்கியதிலிருந்து, வலுவான தனியுரிமைக் கொள்கைகளை மனதில் கொண்டே எங்கள் சேவைகளை உருவாக்கியுள்ளோம். எங்கள் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையில் நீங்கள் கீழ்கண்டவற்றை காணலாம்:
- உங்கள் தரவை நாங்கள் எவ்வாறு கையாளுகிறோம் என்பது பற்றிய கூடுதல் தகவல். எங்கள் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையானது உங்கள் தரவை நாங்கள் எவ்வாறு செயலாக்குகிறோம் என்பது பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குகிறது; அதில், எங்கள் செயலாக்கத்திற்கான சட்ட அடிப்படை, தனியுரிமைக்கான எங்கள் உறுதிப்பாடு ஆகியவையும் அடங்கும்.
- வணிகங்களுடன் சிறந்த தொடர்பு. பல வணிகங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் கிளையன்ட்களுடன் தொடர்பு கொள்ள WhatsApp-ஐச் சார்ந்துள்ளனர். Facebook அல்லது மூன்றாம் தரப்பினரைப் பயன்படுத்தும் வணிகங்களுடன் நாங்கள் பணியாற்றுகிறோம், உங்களுடன் அவர்களின் தகவல்தொடர்புகளை WhatsApp இல் சேமிக்கவும் சிறப்பாக நிர்வகிக்கவும் உதவுகிறோம்.
மேலே செல்லவும்
நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்
எங்கள் சேவைகளை நீங்கள் நிறுவும் போது, அணுகும்போது அல்லது பயன்படுத்தும் போது உட்பட, எங்கள் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, தனிப்பயனாக்க, ஆதரிக்க மற்றும் சந்தைப்படுத்த WhatsApp சில தகவல்களைப் பெற வேண்டும் அல்லது சேகரிக்க வேண்டும். நாங்கள் பெறும் மற்றும் சேகரிக்கும் தகவலின் வகைகள் எங்கள் சேவைகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
சேவைகளை வழங்க எங்களுக்கு சில தகவல்கள் தேவை, இது இல்லாமல் எங்கள் சேவைகளை உங்களுக்கு வழங்க முடியாது. எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு கணக்கை உருவாக்க உங்கள் கைபேசி எண்ணை வழங்க வேண்டும்.
எங்கள் சேவைகளில் விருப்ப அம்சங்கள் உள்ளன, அவற்றை நீங்கள் பயன்படுத்தினால், அவற்றை வழங்க நாங்கள் கூடுதல் தகவல்களைச் சேகரிக்க வேண்டும். அத்தகைய சேகரிப்புகள் பொருந்துவதற்கேற்ப உங்களுக்குத் தெரிவிக்கப்படும். ஒரு அம்சத்தைப் பயன்படுத்தத் தேவையான தகவல்களை வழங்க வேண்டாம் என நீங்கள் தேர்வுசெய்தால், அந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக, சாதனத்திலிருந்து உங்கள் இருப்பிடத் தரவைச் சேகரிக்க எங்களை அனுமதிக்காவிட்டால், உங்கள் இருப்பிடத்தை உங்கள் தொடர்புகளுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ள முடியாது. Android மற்றும் iOS சாதனங்களில் உங்கள் அமைப்புகள் மெனு மூலம் அனுமதிகளை நிர்வகிக்கலாம்.
நீங்கள் வழங்கும் தகவல்கள்
- உங்கள் கணக்குத் தகவல். நீங்கள் WhatsApp கணக்கை உருவாக்க உங்கள் கைபேசி எண் மற்றும் அடிப்படைத் தகவல்களை (நீங்கள் விரும்பிய சுயவிவரப் பெயர் உட்பட) வழங்க வேண்டும். நீங்கள் இந்தத் தகவலை எங்களுக்கு வழங்கவில்லை என்றால், எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு கணக்கை உருவாக்க முடியாது. சுயவிவரப் படம் மற்றும் "விவரம்" சார்ந்த தகவல் போன்ற பிறவற்றையும் உங்கள் கணக்கில் நீங்கள் சேர்க்கலாம்.
- உங்கள் மெசேஜ்கள். நாங்கள் வழக்கமாக எங்கள் சேவைகளை உங்களுக்கு வழங்கும்போது உங்கள் மெசேஜ்களைச் சேமித்துவைக்க மாட்டோம். அதற்குப் பதிலாக, உங்கள் மெசேஜ்கள் உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படுகின்றன, எங்கள் சேவையகங்களில் சேமிக்கப்படுவதில்லை. உங்கள் மெசேஜ்கள் வழங்கப்பட்டதும், அவை எங்கள் சேவையகங்களிலிருந்து நீக்கப்படும். உங்கள் மெசேஜ்களை வழங்கும்போது அவற்றை நாங்கள் சேமிக்கக்கூடிய சூழ்நிலைகளை பின்வரும் சந்தர்ப்பங்கள் விவரிக்கின்றன:
- வழங்கப்படாத மெசேஜ்கள். ஒரு மெசேஜை உடனே வழங்க முடியாவிட்டால் (எடுத்துக்காட்டாக, பெறுநர் ஆஃப்லைனில் இருந்தால்), அனுப்ப முயற்சிக்கும்போது 30 நாட்கள் வரை எங்கள் சேவையகங்களில் மறையாக்க வடிவில் வைத்திருப்போம். ஒரு மெசேஜ் 30 நாட்களுக்குப் பிறகும் வழங்கப்படாவிட்டால், நாங்கள் அதை நீக்கிவிடுவோம்.
- மீடியா முன்னனுப்புதல். ஒரு பயனர் ஒரு மெசேஜில் மீடியாவை முன்னனுப்பும்போது, கூடுதல் முன்னனுப்புகளை மிகவும் திறமையாக வழங்க உதவுவதற்காக அந்த மீடியாவைத் தற்காலிகமாக மறையாக்கப்பட்ட வடிவத்தில் எங்கள் சேவையகங்களில் சேமிக்கிறோம்.
- நாங்கள் எங்கள் சேவைகளுக்கு முழு மறையாக்கத்தை வழங்குகிறோம். முழு மறையாக்கம் என்பது, உங்கள் மெசேஜ்களை எங்களாலும் மூன்றாம் தரப்பினராலும் படிக்க முடியாதவாறு மறையாக்கம் செய்யப்பட்டுள்ளது எனப் பொருள். முழு மறையாக்கம் மற்றும் வணிகங்கள் உங்களுடன் WhatsApp-இல் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பன பற்றி மேலும் அறியவும்.
- உங்கள் இணைப்புகள். நீங்கள் தொடர்புப் பதிவேற்ற அம்சத்தைப் பயன்படுத்தலாம், மற்றும் பொருந்தும் சட்டங்கள் அனுமதித்தால் எங்கள் சேவைகளின் பயனர்கள் மற்றும் உங்கள் பிற தொடர்புகள் உட்பட, உங்கள் முகவரிப் புத்தகத்தில் உள்ள கைபேசி எண்களை தொடர்ந்து எங்களுக்கு வழங்கலாம். உங்கள் தொடர்புகளில் யாரேனும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தவில்லை எனில், அந்தத் தொடர்புகளை எங்களால் அடையாளம் காண முடியாது என உறுதிப்படுத்தும் வகையில் இந்த தகவலை உங்களுக்காக நிர்வகிப்போம். எங்கள் தொடர்புப் பதிவேற்ற அம்சம் பற்றி இங்கு மேலும் அறிக. நீங்கள் குழுக்களை உருவாக்கலாம், அவற்றில் சேரலாம் மற்றும் பிராட்காஸ்ட் பட்டியல்களில் அல்லது குழுக்களில் சேர்க்கப்படலாம், இதுபோன்ற குழுக்கள் மற்றும் பட்டியல்கள் உங்கள் கணக்குத் தகவலுடன் தொடர்புபடுத்தப்படும். உங்கள் குழுக்களுக்கு ஒரு பெயர் வழங்குங்கள். நீங்கள் ஒரு குழு சுயவிவரப்படம் அல்லது விவரத்தை வழங்க முடியும்.
- ஸ்டேட்டஸ் தகவல். நீங்கள் உங்கள் கணக்கில் ஒரு ஸ்டேட்டஸை சேர்ப்பதாக இருந்தால், அதை எங்களுக்கு வழங்கலாம். Android, iPhone அல்லது KaiOS-இல் ஸ்டேட்டஸை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிக.
- பரிவர்த்தனைகள் மற்றும் பேமெண்ட்கள் தரவு. நீங்கள் எங்கள் பேமெண்ட் சேவைகளைப் பயன்படுத்தினால், அல்லது கொள்முதல் அல்லது பிற நிதிப் பரிவர்த்தனைகளுக்காக எங்கள் சேவைகளைப் பயன்படுத்தினால், பேமெண்ட் கணக்கு மற்றும் பரிவர்த்தனைத் தகவல்கள் உட்பட உங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை நாங்கள் செயலாக்குகிறோம். பேமெண்ட் கணக்கு மற்றும் பரிவர்த்தனைத் தகவல்களில் பரிவர்த்தனையை நிறைவேற்றத் தேவையான தகவல்கள் அடங்கும் (எடுத்துக்காட்டாக, உங்கள் பேமெண்ட் முறை, அனுப்பப்படும் விவரங்கள் மற்றும் பரிவர்த்தனைத் தொகை) உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தில் கிடைக்கும் எங்கள் பேமெண்ட் சேவைகளைப் பயன்படுத்தினால், எங்கள் தனியுரிமை நடைமுறைகள் பொருந்தக்கூடிய பேமெண்ட் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளன.
- வாடிக்கையாளர் உதவி மற்றும் பிற தொடர்புகள். வாடிக்கையாளர் உதவிக்காக அல்லது வேறு நோக்கத்துக்காக நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ளும் போது, எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களை நீங்கள் வழங்கலாம், அதில் உங்கள் மெசேஜ்களின் நகல்கள், பயனுள்ளவை என நீங்கள் கருதும் வேறு ஏதேனும் தகவல்கள், உங்களைத் தொடர்பு கொள்வதற்கான வழிமுறை (எ.கா. மின்னஞ்சல் முகவரி) போன்றவை அடங்கும். எடுத்துக்காட்டாக, எங்கள் செயலியின் செயல்திறன் அல்லது பிற சிக்கல்கள் தொடர்பான தகவல்களைக் கொண்ட மின்னஞ்சலை நீங்கள் எங்களுக்கு அனுப்பலாம்.
- பயன்பாடு மற்றும் பதிவு தகவல். சேவை, கண்டறிதல் மற்றும் செயல்திறன் தொடர்பான தகவல்கள் போன்ற, எங்கள் சேவைகளில் உங்கள் செயல்பாடு குறித்த தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். இதில் உங்கள் செயல்பாடு பற்றிய தகவல்களும் (எங்கள் சேவைகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள், உங்கள் சேவைகள் அமைப்புகள், எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி மற்றவர்களுடன் நீங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் (நீங்கள் ஒரு வணிகத்துடன் தொடர்பு கொள்ளும்போது உட்பட), மற்றும் உங்கள் செயல்பாடுகள் மற்றும் தொடர்புகளின் நேரம், எண்ணிக்கை மற்றும் காலம் உட்பட), பதிவு கோப்புகள் மற்றும் கண்டறிதல், செயலிழப்பு, வலைத்தளம் மற்றும் செயல்திறன் பதிவுகளும் அறிக்கைகளும் அடங்கும். எங்கள் சேவையைப் பயன்படுத்த நீங்கள் பதிவுசெய்த நேரம் பற்றிய தகவல்களும் இதில் அடங்கும்; மேலும் எங்கள் மெசேஜ், அழைப்பு, ஸ்டேட்டஸ், குழுக்கள் (குழு பெயர், குழு படம், குழு விளக்கம் உட்பட), பேமெண்ட் அல்லது வணிக அம்சங்கள் போன்ற நீங்கள் பயன்படுத்தும் அம்சங்கள்; சுயவிவரப்படம், “விவரம்” குறித்த தகவல், நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்களா என்பது; நீங்கள் கடைசியாக எங்கள் சேவைகளைப் பயன்படுத்திய நேரம் (உங்கள் "கடைசியாகப் பார்த்தது"); உங்கள் "விவரம்" சார்ந்த தகவலை நீங்கள் கடைசியாக புதுப்பித்த நேரம் ஆகியவையும் அடங்கும்.
- சாதனம் மற்றும் இணைப்பு தகவல். எங்கள் சேவைகளை நீங்கள் நிறுவும்போது, அணுகும்போது அல்லது பயன்படுத்தும்போது சாதனம் மற்றும் இணைப்பு சார்ந்த தகவல்களை நாங்கள் சேகரிப்போம். வன்பொருள் மாதிரி, இயக்க முறைமை தகவல், பேட்டரி நிலை, சிக்னல் அளவு, செயலியின் பதிப்பு, உலாவி தகவல், மொபைல் நெட்வொர்க், தொலைபேசி எண், மொபைல் ஆபரேட்டர் அல்லது ISP, மொழி மற்றும் நேர மண்டலம், IP முகவரி, சாதன செயல்பாட்டு தகவல், மற்றும் அடையாளங்காட்டிகள் (ஒரே சாதனம் அல்லது கணக்குடன் தொடர்புடைய Facebook நிறுவன தயாரிப்புகளுக்குரிய தனித்துவமான அடையாளங்காட்டிகள் உட்பட) ஆகியவை அடங்கும்.
- இருப்பிடத் தகவல். இருப்பிடம் தொடர்பான அம்சங்களைப் பயன்படுத்த நீங்கள் தேர்வுசெய்யும்போது உங்கள் சாதனத்திலிருந்து துல்லியமான இருப்பிடத் தகவலை நாங்கள் சேகரித்துப் பயன்படுத்துகிறோம், எடுத்துக்காட்டாக உங்கள் தொடர்புகளுடன் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்துகொள்ள முடிவு செய்யும்போது அல்லது அருகிலுள்ள இருப்பிடங்களையோ மற்றவர்கள் உங்களுடன் பகிர்ந்து கொண்ட இடங்களையோ பார்க்கும்போது. இருப்பிடப் பகிர்வு போன்ற சில இருப்பிடம்-தொடர்பான தகவல் பற்றிய அமைப்புகளை உங்கள் சாதன அமைப்புகளில் அல்லது செயலியில் உள்ள அமைப்புகளில் காணலாம். எங்கள் இருப்பிடம்-தொடர்பான அம்சங்களை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும், உங்கள் பொதுவான இருப்பிடத்தை (எ.கா. நகரம் மற்றும் நாடு) யூகித்து அறிவதற்கு IP முகவரிகள் மற்றும் தொலைபேசி எண் பகுதி குறியீடுகள் போன்ற பிற தகவல்களை பயன்படுத்துகிறோம். கண்டறிதல் மற்றும் சரிசெய்தல் நோக்கங்களுக்காகவும் உங்கள் இருப்பிடத் தகவலை பயன்படுத்துகிறோம்.
- குக்கீகள். இணையம்-சார்ந்த எங்கள் சேவைகளை வழங்குவது, உங்கள் அனுபவங்களை மேம்படுத்துதல், எங்கள் சேவைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது மற்றும் அவற்றைத் தனிப்பயனாக்குவது போன்ற எங்கள் சேவைகளை இயக்க மற்றும் வழங்க குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, இணையம், டெஸ்க்டாப் மற்றும் பிற இணையம்-சார்ந்த சேவைகளுக்கு எங்கள் சேவைகளை வழங்க குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எங்கள் உதவி மையக் கட்டுரைகளில் எவை மிகவும் பிரபலமானவை என்பதைப் புரிந்துகொள்ளவும் எங்கள் சேவைகள் தொடர்பான தேவையான உள்ளடக்கத்தைக் காண்பிக்கவும் நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்தலாம். கூடுதலாக, உங்கள் மொழி விருப்பங்கள் போன்ற உங்கள் விருப்பங்களை நினைவில் வைத்துக் கொள்ள, பாதுகாப்பான அனுபவத்தை வழங்க, மற்றபடி உங்களுக்காக எங்கள் சேவைகளைத் தனிப்பயனாக்க நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்தலாம். எங்கள் சேவைகளை உங்களுக்கு வழங்க நாங்கள் குக்கீகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது பற்றி மேலும் அறிக.
மூன்றாம் தரப்புத் தகவல்
- உங்களைப் பற்றி மற்றவர்கள் வழங்கும் தகவல்கள். நாங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை பிற பயனர்களிடமிருந்து பெறுகிறோம். எடுத்துக்காட்டாக, உங்களுக்குத் தெரிந்த பிற பயனர்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, அவர்கள் உங்கள் கைபேசி எண், பெயர் மற்றும் பிற தகவல்களை (அவர்கள் மொபைல் முகவரி புத்தகத்திலிருந்து வரும் தகவல்கள் போன்றவை) வழங்கலாம், இதேபோல் நீங்களும் அவர்களின் இத்தகு தகவல்களை வழங்கலாம். அவர்கள் உங்களுக்கு மெசேஜ்களை அனுப்பலாம், நீங்கள் சேர்ந்த குழுக்களுக்கு மெசேஜ்களை அனுப்பலாம் அல்லது உங்களை அழைக்கலாம். இந்தப் பயனர்கள் ஒவ்வொருவரும் உங்களின் தரவை எங்களுக்கு வழங்குவதற்கு முன்னர், அதைச் சேகரிக்க, பயன்படுத்த மற்றும் பகிர்ந்துகொள்ள அவர்களிடம் சட்டரீதியான உரிமைகள் இருக்க வேண்டும்.
பொதுவாக எந்தவொரு பயனரும் உங்கள் அரட்டைகள் அல்லது மெசேஜ்களின் திரைப்பிடிப்பை எடுக்கலாம் அல்லது அவர்களுடனான உங்கள் அழைப்புகளைப் பதிவு செய்யலாம், பிறகு அவற்றை WhatsApp-க்கு அல்லது வேறொருவருக்கு அனுப்பலாம் அல்லது இன்னொரு தளத்தில் பதிவிடலாம் என்பதை நினைவில் கொள்ளவும். - பயனர் புகார்கள். நீங்கள் பிற பயனர்கள் குறித்து புகாரளிக்க முடியும் என்பது போலவே, பிற பயனர்கள் அல்லது மூன்றாம் தரப்பினரும் எங்கள் சேவைகளில் அவர்களுடனான அல்லது மற்றவர்களுடனான உங்கள் உரையாடல்கள் மற்றும் உங்கள் மெசேஜ்கள் குறித்து எங்களிடம் புகாரளிக்க விரும்பலாம்; எடுத்துக்காட்டாக, எங்கள் விதிமுறைகள் அல்லது கொள்கை மீறல்கள் குறித்து புகாரளிக்கலாம். ஒரு புகார் தயாரிக்கப்படும் போது, புகாரளிக்கும் பயனர் மற்றும் புகாரளிக்கப்பட்ட பயனர் என இருவரின் தகவல்களையும் நாங்கள் சேகரிப்போம். ஒரு பயனருக்கான புகார் தயாரிக்கப்படும் போது என்ன நடக்கிறது என்பது பற்றி மேலும் அறிய, "மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து அம்சங்களை" இங்கே பார்க்கவும்.
- WhatsApp-இல் உள்ள வணிகங்கள். எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி நீங்கள் தொடர்பு கொள்ளும் வணிகங்கள் உங்களுடனான தொடர்புகளைப் பற்றிய தகவல்களை எங்களுக்கு வழங்கக்கூடும். இந்த வணிகங்கள் ஒவ்வொன்றும் எங்களுக்கு எந்தவொரு தகவலையும் வழங்கும்போது பொருந்தக்கூடிய சட்டத்தின்படி செயல்பட வேண்டும். WhatsApp-இல் ஒரு வணிகம் மெசேஜ் அனுப்பும்போது, நீங்கள் பகிர்ந்துகொள்ளும் உள்ளடக்கம் அந்த வணிகத்தில் இருக்கும் பலருக்கும் தெரியும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். மேலும், சில வணிகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடனான தகவல்தொடர்புகளை நிர்வகிக்க உதவியாக மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுடன் (இதில் Facebook உட்படலாம்) இணைந்து செயலாற்றலாம். எடுத்துக்காட்டாக, அத்தகு ஒரு மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர் ஒரு வணிகத்தின் தகவல்தொடர்புகளை அனுப்ப, சேமிக்க, படிக்க, நிர்வகிக்க அல்லது மற்றபடி வணிக நோக்கத்துக்காக செயலாக்க அவற்றுக்கான அணுகலை அவர்களுக்கு அந்த வணிகம் வழங்கலாம்.
ஒரு வணிகம் எப்படி உங்கள் தகவல்களை மூன்றாம் தரப்பினருடனோ Facebook உடனோ பகிர்ந்து கொள்ளலாம் என்பது உட்பட உங்கள் தகவல்களை அது எவ்வாறு செயலாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள, அந்த வணிகத்தின் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் படிக்க வேண்டும் அல்லது அந்த வணிகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும். - மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள். எங்கள் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, தனிப்பயனாக்க, ஆதரவு மற்றும் சந்தைப்படுத்த எங்களுக்கு உதவ மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் பிற Facebook நிறுவனங்கள் உடன் நாங்கள் பணியாற்றுகிறோம். எடுத்துக்காட்டாக, எங்கள் செயலிகளை விநியோகிக்க நாங்கள் அவர்களுடன் இணைந்து செயல்படுகிறோம்; எங்கள் தொழில்நுட்ப மற்றும் திடநிலையான உள்கட்டமைப்பு, சேவை வழங்கல் மற்றும் பிற அமைப்புகள்; பொறியியல் ஆதரவு, சைபர் பாதுகாப்பு ஆதரவு மற்றும் செயல்பாட்டு ஆதரவை வழங்குதல்; இருப்பிடம், வரைபடம் மற்றும் இடங்களின் தகவல்களை வழங்குதல்; பேமெண்ட் செயல்முறை; எங்கள் சேவைகளை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவுதல்; எங்கள் சேவைகளை சந்தைப்படுத்துதல்; எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி உங்களை வணிகங்களுடன் இணைக்க உதவுகிறது; எங்களுக்காக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை நடத்துதல்; பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் நம்பகத்தன்மையை உறுதிசெய்தல்; மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கு உதவுதல். இந்த நிறுவனங்கள் சில சூழ்நிலைகளில் உங்களைப் பற்றிய தகவல்களை எங்களுக்கு வழங்கக்கூடும்; எடுத்துக்காட்டாக, சேவை சார்ந்த சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்ய உதவுவதற்கு ஆப் ஸ்டோர்ஸ் எங்களுக்கு அறிக்கைகளை வழங்கலாம்.
கீழேயுள்ள "பிற Facebook நிறுவனங்களுடன் நாங்கள் எவ்வாறு செயல்படுகிறோம்" என்ற பகுதியில், எப்படி பிற Facebook நிறுவனங்களிடம் WhatsApp தகவல்களைச் சேகரிக்கிறது மற்றும் பகிர்ந்து கொள்கிறது என்பது பற்றி மேலும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. Facebook நிறுவனங்களுடன் நாங்கள் எவ்வாறு செயல்படுகிறோம் என்பது குறித்தும் எங்கள் உதவி மையத்தில் மேலும் அறியலாம். - மூன்றாம் தரப்பு சேவைகள். மூன்றாம் தரப்பு சேவைகள் மற்றும் Facebook நிறுவன தயாரிப்புகள் தொடர்பாக எங்கள் சேவைகளைப் பயன்படுத்த நாங்கள் உங்களை அனுமதிக்கிறோம். இதுபோன்ற மூன்றாம் தரப்பு சேவைகள் அல்லது Facebook நிறுவன தயாரிப்புகளுடன் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தினால், உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் அவர்களிடமிருந்து பெறலாம்; எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகளில் உங்கள் WhatsApp தொடர்புகள், குழுக்கள் அல்லது பிராட்காஸ்ட் பட்டியல்களுடன் ஒரு செய்திக் கட்டுரையைப் பகிர்ந்து கொள்ள ஒரு செய்திச் சேவையில் WhatsApp பகிர் பொத்தானைப் பயன்படுத்தினால், அல்லது மொபைல் கேரியர் அல்லது சாதன வழங்குநரின் விளம்பரத்தின் மூலம் எங்கள் சேவைகளை அணுக நீங்கள் தேர்வுசெய்தால். நீங்கள் மூன்றாம் தரப்பு சேவைகளை அல்லது Facebook நிறுவன தயாரிப்புகளை பயன்படுத்தும்போது, அவற்றின் சொந்த விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளே அந்தச் சேவைகள் மற்றும் தயாரிப்புகளின் உங்கள் பயன்பாட்டை நிர்வகிக்கும் என்பதை நினைவில் கொள்க.
மேலே செல்லவும்
நாங்கள் தகவலை எவ்வாறு பயன்படுத்துகிறோம்
எங்கள் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, தனிப்பயனாக்க, ஆதரிக்க, வழங்க மற்றும் சந்தைப்படுத்த எங்களிடம் உள்ள தகவல்களை (நீங்கள் செய்யும் தேர்வுகள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு உட்பட்டு) பயன்படுத்துகிறோம். இதோ பயன்படுத்தும் முறை:
- எங்கள் சேவைகள். வாடிக்கையாளர் உதவியை வழங்குதல், கொள்முதல்கள் அல்லது பரிவர்த்தனைகளை நிறைவேற்றுதல், எங்கள் சேவைகளை மேம்படுத்துதல், சரிசெய்தல் மற்றும் தனிப்பயனாக்குதல் ஆகியவை உட்பட, எங்கள் சேவைகளை இயக்கவும் வழங்கவும் நாங்கள் எங்களிடம் உள்ள தகவல்களைப் பயன்படுத்துகிறோம். எங்கள் சேவைகளை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள, எங்கள் சேவைகளை மதிப்பீடு செய்து மேம்படுத்த; புதிய சேவைகள் மற்றும் அம்சங்களை ஆராய, மேம்படுத்துதல் மற்றும் சோதித்தலை மேற்கொள்ள; மற்றும் சரிசெய்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாங்கள் எங்களிடம் உள்ள தகவல்களைப் பயன்படுத்துகிறோம். எங்களைத் தொடர்புகொள்ளும் போது உங்களுக்குப் பதிலளிப்பதற்காகவும் உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவோம்.
- பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் நம்பகத்தன்மை. பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் நம்பகத்தன்மை எங்கள் சேவைகளின் பிரிக்கமுடியாத ஓர் அங்கம். கணக்குகள் மற்றும் செயல்பாட்டை சரிபார்த்தல்; தீங்கு விளைவிக்கும் நடத்தைக்கு எதிராகப் போராடுதல், மோசமான அனுபவங்கள் மற்றும் ஸ்பேமிலிருந்து பயனர்களைப் பாதுகாத்தல்; எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளின் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு அல்லது மீறல்களை விசாரிப்பதன் மூலமும், எங்கள் சேவைகள் சட்டப்பூர்வமாக பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வது போன்ற எங்கள் சேவைகளில் பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் நம்பகத்தன்மையை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு நாங்கள் எங்களிடம் உள்ள தகவல்களைப் பயன்படுத்துகிறோம். மேலும் தகவலுக்கு, கீழே உள்ள "சட்டம், எங்கள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு" பகுதியைப் பார்க்கவும்.
- எங்கள் சேவைகள் மற்றும் Facebook நிறுவனங்கள் பற்றிய தொடர்புகள். எங்கள் சேவைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கவும், எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகள் மற்றும் பிற முக்கியமான புதுப்பிப்புகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கவும் நாங்கள் எங்களிடம் உள்ள தகவல்களைப் பயன்படுத்துகிறோம். எங்கள் சேவைகள் மற்றும் Facebook நிறுவனங்களுக்கான சந்தையிடலை நாங்கள் உங்களுக்கு வழங்கலாம். மேலும் தகவலுக்கு "உங்கள் உரிமைகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள்" பகுதியைப் பார்க்கவும்.
- மூன்றாம் தரப்பு பேனர் விளம்பரங்கள் இல்லை. எங்கள் சேவைகளில் மூன்றாம் தரப்பு பேனர் விளம்பரங்களை நாங்கள் இன்னும் அனுமதிக்கவில்லை. அவற்றை அறிமுகப்படுத்த எங்களுக்கு விருப்பமில்லை, ஆனால் நாங்கள் எப்போதாவது அதைச் செய்தால், இந்த தனியுரிமைக் கொள்கையை நாங்கள் புதுப்பிப்போம்.
- வணிக தொடர்புகள். WhatsApp-இல் வணிகங்களுக்கான பட்டியல்கள் போன்ற எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி உங்களுக்கும் மூன்றாம் தரப்பினருக்கும் இடையே தொடர்புகொள்வதற்கும் உரையாடுவதற்கும் நாங்கள் உதவுகிறோம், அங்கு நீங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பார்வையிடலாம் மற்றும் ஆர்டர்கள் கொடுக்கலாம். வணிகங்கள் உங்களுக்கு பரிவர்த்தனை, நியமனம் மற்றும் அனுப்பும்முறை, தயாரிப்பு மற்றும் சேவை புதுப்பிப்புகள்; மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவற்றின் அறிவிப்புகளை அனுப்பலாம் எடுத்துக்காட்டாக, வரவிருக்கும் பயணத்திற்கான விமான நிலை தகவல், நீங்கள் வாங்கியவற்றிற்கான ரசீது அல்லது டெலிவரி செய்யப்படும் போது அறிவிப்பு ஆகியவற்றைப் பெறலாம். ஒரு வணிகத்திலிருந்து நீங்கள் பெறும் மெசேஜ்களில் உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு சலுகையும் அடங்கியிருக்கலாம். உங்களுக்கு நிறைய ஸ்பாம் வருவதை நாங்கள் விரும்பவில்லை; உங்கள் எல்லா மெசேஜ்களையும் போலவே, இந்த தகவல்தொடர்புகளையும் நீங்கள் நிர்வகிக்கலாம், மேலும் நீங்கள் செய்யும் தேர்வுகளை நாங்கள் மதிப்போம்.
- மெசேஜிங் மெட்டாடேட்டா. மெசேஜிங் மெட்டாடேட்டாவில், உங்கள் மெசேஜ்களை அல்லது அழைப்புகளை தெரிவிக்க நாங்கள் செயலாக்கும் தகவல்கள் அடங்கும், மேலும் உங்கள் பயனர் ஐடி மற்றும் நீங்கள் ஒரு மெசேஜை அனுப்பும் நேரம் போன்ற தகவல்களும் அதில் அடங்கும். தகவல்தொடர்புகளை கடத்தவும், எங்கள் சேவைகளை இயக்கவும் (பொது இணையப் போக்குவரத்து மேலாண்மை மற்றும் தடுப்பு, கண்டறிதல், விசாரணை மற்றும் தோல்விகளை சரிசெய்தல் உட்பட), எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்தை உறுதிப்படுத்த (அவற்றின் கிடைக்கும் தன்மை, மெய்மை, நம்பகத்தன்மை மற்றும் இரகசியத்தன்மை, மற்றும் குறிப்பாக பாதுகாப்பு சம்பவங்கள், ஸ்பேம், பாதிப்புகள், தீம்பொருள் மற்றும் அங்கீகாரமற்ற பயன்பாடு அல்லது சேவைகளுக்கான அணுகல்), பில்லிங் (பொருந்தும் இடத்தில்) மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமான கடமைகளுக்கு இணங்குதல், தடுப்பு, கண்டறிதல், விசாரணை மற்றும் சரிசெய்தல் ஆகியவற்றுக்கு நாங்கள் மெசேஜிங் மெட்டாடேட்டாவை பயன்படுத்துகிறோம்.
மேலே செல்லவும்
நீங்களும் நாங்களும் பகிர்ந்து கொள்ளும் தகவல்
எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது மற்றும் தொடர்பு கொள்ளும்போது உங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறீர்கள், மேலும் எங்கள் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, தனிப்பயனாக்க, ஆதரிக்க, வழங்க மற்றும் சந்தைப்படுத்த எங்களுக்கு உதவுவதற்கு உங்கள் தகவல்களை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.
- நீங்கள் தொடர்புகொள்ள விரும்புவோருக்கு உங்கள் தகவல்களை அனுப்புங்கள். எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி அதன் மூலம் நீங்கள் தொடர்பு கொள்ளும்போது உங்கள் தகவல்களை (மெசேஜ்கள் உட்பட) பகிர்ந்து கொள்கிறீர்கள்.
- உங்கள் கணக்குடன் தொடர்புடைய தகவல். உங்கள் மொபைல் எண், சுயவிவரப் பெயர் மற்றும் புகைப்படம், "விவரம்" சார்ந்த தகவல், கடைசியாகப் பார்த்த தகவல் மற்றும் மெசேஜ் ரசீதுகள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் எவருக்கும் கிடைக்கின்றன, இருப்பினும் நீங்கள் யாரைத் தொடர்பு கொள்கிறீர்கள், வணிகங்கள் உட்பட பிற பயனர்களுக்கு கிடைக்கக்கூடிய சில தகவல்களை நிர்வகிக்க உங்கள் சேவை அமைப்புகளை நீங்கள் கட்டமைக்க முடியும்.
- உங்கள் தொடர்புகள் மற்றும் பிறர். நீங்கள் தொடர்பு கொள்ளும் வணிகங்கள் உள்ளிட்ட பயனர்கள் உங்கள் தகவல்களை (உங்கள் ஃபோன் எண் அல்லது மெசேஜ்கள் உட்பட) சேமித்துவைக்கலாம் அல்லது எங்கள் சேவைகளிலும் வெளியேயும் மற்றவர்களுடன் மீண்டும் பகிரலாம். எங்கள் சேவைகளில் நீங்கள் தொடர்புகொள்பவர்களையும் நீங்கள் பகிரும் சில தகவல்களையும் நிர்வகிக்க, உங்கள் சேவைகளின் அமைப்புகளையும் எங்கள் சேவைகளில் உள்ள "தடுப்பு" அம்சத்தையும் பயன்படுத்தலாம்.
- WhatsApp-இல் உள்ள வணிகங்கள். வணிகங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவது தொடர்பான அளவீடுகளை அவற்றுக்கு வழங்குவது போன்ற குறிப்பிட்ட சேவைகளையும் அம்சங்களையும் நாங்கள் வழங்குகிறோம்.
- மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள். எங்கள் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, தனிப்பயனாக்க, ஆதரவு மற்றும் சந்தைப்படுத்த எங்களுக்கு உதவ மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் பிற Facebook நிறுவனங்கள் உடன் நாங்கள் பணியாற்றுகிறோம். தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, டெலிவரி மற்றும் பிற அமைப்புகளை வழங்குவது, எங்கள் சேவைகளைச் சந்தைப்படுத்துவது; எங்களுக்காகக் கருத்தாய்வுகளையும் ஆராய்ச்சியையும் நடத்துவது; பயனர்கள் மற்றும் பிறரின் பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் நம்பகத்தன்மையை பாதுகாப்பது; மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கு உதவுவது போன்ற எங்கள் சேவைகளை ஆதரிக்க இந்த நிறுவனங்களுடன் நாங்கள் பணியாற்றுகிறோம். இந்தத் திறனில் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் பிற Facebook நிறுவனங்கள் உடன் நாங்கள் தகவல்களைப் பகிரும்போது, எங்கள் அறிவுறுத்தல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க, எங்கள் சார்பாக உங்கள் தகவல்களை அவர்கள் பயன்படுத்துமாறு நாங்கள் கோருகிறோம். Facebook நிறுவனங்கள் எங்கள் சேவைகளை இயக்க மற்றும் வழங்க எங்களுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, கீழே உள்ள "பிற Facebook நிறுவனங்களுடன் நாங்கள் எவ்வாறு செயல்படுகிறோம்" என்பதைப் பார்க்கவும். Facebook நிறுவனங்களுடன் நாங்கள் எவ்வாறு செயல்படுகிறோம் என்பது குறித்தும் எங்கள் உதவி மையத்தில் மேலும் அறியலாம்.
- மூன்றாம் தரப்பு சேவைகள். எங்கள் சேவைகளுடன் ஒருங்கிணைந்த மூன்றாம் தரப்புச் சேவைகள் அல்லது பிற Facebook நிறுவனத் தயாரிப்புகளை நீங்கள் அல்லது மற்றவர்கள் பயன்படுத்தும்போது, அந்த மூன்றாம் தரப்புச் சேவைகள் நீங்கள் அல்லது மற்றவர்கள் அவற்றுடன் எவற்றைப் பகிர்கிறீர்கள் என்பது பற்றிய தகவல்களைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகளுடன் (iCloud அல்லது Google Drive போன்றவை) ஒருங்கிணைந்த தரவுக் காப்புப் பிரதிச் சேவையைப் பயன்படுத்தினால், அவர்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை, அதாவது உங்கள் WhatsApp மெசேஜ்கள் போன்றவற்றைப் பெறுவார்கள். மூன்றாம் தரப்புச் சேவை அல்லது எங்கள் சேவைகளின் மூலம் இணைக்கப்பட்ட மற்றொரு Facebook நிறுவனத் தயாரிப்புடன் நீங்கள் தொடர்பு கொண்டால், மூன்றாம் தரப்புத் தளத்திலிருந்து உள்ளடக்கத்தை செயலியில் உள்ள பிளேயரில் இயக்கும்போது, உங்கள் IP முகவரி மற்றும் நீங்கள் ஒரு WhatsApp பயனர் என்ற உண்மை போன்ற உங்களைப் பற்றிய தகவல்கள், அத்தகைய மூன்றாம் தரப்பு அல்லது Facebook நிறுவனத் தயாரிப்புக்கு வழங்கப்படலாம். நீங்கள் மூன்றாம் தரப்பு சேவைகளை அல்லது பிற Facebook நிறுவன தயாரிப்புகளைப் பயன்படுத்தும்போது, அவற்றின் சொந்த விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளே அந்தச் சேவைகள் மற்றும் தயாரிப்புகளின் உங்கள் பயன்பாட்டை நிர்வகிக்கும் என்பதை நினைவில் கொள்க.
மேலே செல்லவும்
பிற Facebook நிறுவனங்களுடன் நாங்கள் எவ்வாறு செயல்படுகிறோம்
Facebook நிறுவனங்களின் ஒரு பகுதியாக, Facebook நிறுவனத் தயாரிப்புகள் முழுவதும் பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்காக மற்ற Facebook நிறுவனங்களிடமிருந்து WhatsApp ஆனது தகவல்களைப் பெறுகிறது, மேலும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது, எ.கா., ஸ்பேம், அச்சுறுத்தல்கள், துஷ்பிரயோகம் அல்லது மீறல் நடவடிக்கைகளைத் தடுக்க.
எங்கள் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, தனிப்பயனாக்க, ஆதரவு வழங்க மற்றும் சந்தைப்படுத்த எங்களுக்கு உதவ எங்கள் சார்பாக செயல்படும், பிற Facebook நிறுவனங்களுடன் WhatsApp செயல்படுகிறது, மேலும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது. இதில் பின்வரும் நோக்கங்களுக்காக உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் அமைப்புகளை வழங்குதல் அடங்கும், எ.கா., உலகின் சகல பகுதிகளுடனும் உங்களுக்கு விரைவான, சாரத்தகுந்த மெசேஜ் மற்றும் அழைப்புச் சேவைகளை வழங்குவதற்காக; உள்கட்டமைப்பு மற்றும் சேவை வழங்குதல் அமைப்புகளை மேம்படுத்துவதற்காக; எங்கள் சேவைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்காக; வணிகங்களுடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்வதற்கான வழியை வழங்க எங்களுக்கு உதவுவதற்காக; மற்றும் அமைப்புகளைப் பாதுகாப்பதற்காக. Facebook நிறுவனங்களிடமிருந்து நாங்கள் சேவைகளைப் பெறும்போது, அவர்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் WhatsApp சார்பாகவும் எங்கள் அறிவுறுத்தல்களின்படியும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அடிப்படையில் WhatsApp பகிர்ந்துகொள்ளும் தகவல் எதையும் Facebook நிறுவனங்களின் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியாது.
Facebook நிறுவனங்களுடன் WhatsApp எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய கூடுதல் தகவல்களை எங்கள் உதவி மையத்தில் அமைத்துள்ளோம்.
மேலே செல்லவும்
தரவைச் செயலாக்குவதற்கான எங்கள் சட்ட அடிப்படைகள்
பொருந்தக்கூடிய தரவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நிறுவனங்கள் தரவைச் செயலாக்க ஒரு சட்ட அடிப்படை கொண்டிருக்க வேண்டும். இந்தத் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள பல்வேறு நோக்கங்களுக்காக உங்கள் தரவைச் செயலாக்க வெவ்வேறு சட்ட அடிப்படைகளை நாங்கள் நம்புகிறோம். கீழே விளக்கப்பட்டுள்ளபடி, சூழ்நிலைகளைப் பொறுத்து, உங்கள் தரவை ஒரே நோக்கத்திற்காகச் செயலாக்கும்போது நாங்கள் வெவ்வேறு சட்ட அடிப்படைகளை நம்பலாம். கீழேயுள்ள ஒவ்வொரு சட்ட அடிப்படைக்கும், எங்கள் செயலாக்கத்தின் நோக்கங்கள் (உங்கள் தகவலை நாங்கள் ஏன் செயலாக்குகிறோம்) மற்றும் எங்கள் செயலாக்க செயல்பாடுகள் (உங்கள் தரவை நாங்கள் எவ்வாறு செயலாக்குகிறோம், எ.கா., நாங்கள் உங்களிடமிருந்து தகவல்களை சேகரித்து உங்கள் கணக்கை உருவாக்க அதைப் பயன்படுத்துகிறோம்) போன்றவற்றை விவரிக்கிறோம். ஒவ்வொரு நோக்கத்திற்காகவும் நாங்கள் செயலாக்கும் உங்கள் தரவின் வகைகளையும் பட்டியலிடுகிறோம்.
மேலும், நாங்கள் எந்தச் சட்ட அடிப்படையைப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து உங்களுக்கு குறிப்பிட்ட உரிமைகளும் உள்ளன, அவற்றை நாங்கள் கீழே விளக்கியுள்ளோம். எந்தச் சட்டபூர்வ அடிப்படையைப் பயன்படுத்தினாலும், உங்கள் தரவை அணுக, சரிசெய்ய மற்றும் அழிக்க உங்களுக்கு எப்போதும் உரிமை உள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் உரிமைகளைப் பிரயோகிக்க, கீழே உள்ள "உங்கள் உரிமைகளை எப்படிப் பிரயோகிப்பது" என்ற பகுதியைக் காண்க.
"நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்" என்ற பகுதியில் விவரிக்கப்பட்டுள்ள தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம் மற்றும் பகிர்ந்து கொள்கிறோம்:
- எங்கள் விதிமுறைகளின் "எங்கள் சேவைகள்" பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள செய்தியிடல் மற்றும் தகவல் தொடர்புச் சேவைகளை இயக்க மற்றும் வழங்குவதற்கு இது அவசியமானது. இங்கே மேலும் அறிக;
- பொருந்தக்கூடிய இடத்தில் (சட்டப்பூர்வமான ஒப்புதல் தேவைப்படும் சூழ்நிலை உட்பட), நீங்கள் உங்கள் சம்மதத்தை வழங்கியிருந்தால், மேலும் அதை நீங்கள் எந்த நேரத்திலும் திரும்பப் பெறலாம். இங்கே மேலும் அறிக;
- சட்ட அமலாக்கத்தின் சட்டப்பூர்வ கோரிக்கைக்கு நாங்கள் பதிலளிக்க வேண்டியது போன்ற சட்டக் கடமைகளுக்கு இணங்க வேண்டிய அவசியத்துக்கேற்ப. இங்கே மேலும் அறிக;
- தேவைப்படும் நேரத்தில், உங்கள் முக்கிய நலன்களைப் பாதுகாக்க, அல்லது உங்களுக்கோ பிறருக்கோ உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிற அவசரநிலை போன்று பிறரின் முக்கிய நலன்களைப் பாதுகாக்க அவசியம் ஏற்படும்போது மற்றும் ஏற்பட்டால். இங்கே மேலும் அறிக;
- எங்களின் (அல்லது பிறரின்) நியாயமான நலன்களுக்கு அவசியமுள்ளதற்கேற்ப, இதில் எங்கள் பயனர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு ஒரு புதுமையான, பொருத்தமான, பாதுகாப்பான மற்றும் இலாபகரமான சேவையை வழங்குவதிலுள்ள எங்கள் நலன்களும் அடங்கும், எனினும் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க வேண்டிய தேவையுள்ள உங்கள் நலன்கள் அல்லது அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்துக்கு இந்த நலன்களை விட முன்னுரிமை உண்டு; எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகள் கொடிய அல்லது சட்டவிரோதச் செயல்பாட்டுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுத்தல். இங்கே மேலும் அறிக;
- பொது நலனுக்கு அவசியமான சூழ்நிலையில். இங்கே மேலும் அறிக.
உங்கள் தரவைச் செயலாக்குவதற்கான வழிகள் மற்றும் நோக்கங்கள் மேலும் அவ்வாறு செய்வதற்கான எங்கள் சட்ட அடிப்படைகளைப் பற்றி நீங்கள் இங்கே மேலும் அறியலாம்.
மேலே செல்லவும்
உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு செயலாக்குகிறோம்
விதிமுறைகளுக்கு ஏற்ப சேவைகளை வழங்குதல்
உங்களைப் பற்றி எங்களிடம் உள்ள தரவை ("நாங்கள் சேகரிக்கும் தகவல்" பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி) உங்களுடன் எங்கள் ஒப்பந்தத்தை (விதிமுறைகள்) மேற்கொள்ள அவசியமான வகையில் செயலாக்குகிறோம். நாங்கள் செயலாக்கும் தரவின் வகைகளானது நீங்கள் வழங்க விரும்பும் தரவுகளைப் பொறுத்தும், எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தும் (இது நாங்கள் சேகரிக்கும் தகவல்களை தானாகவே தீர்மானிக்கும்) அமையும். எங்கள் ஒப்பந்தச் சேவைகளை வழங்குவதற்குத் தேவையான செயலாக்க நோக்கங்கள்:
உங்கள் தரவுகளை ஏன், எப்படி செயலாக்குகிறோம்:
- எங்கள் விதிமுறைகளில் உள்ள "எங்கள் சேவைகள்" பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளபடி எங்கள் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, தனிப்பயனாக்க மற்றும் ஆதரிக்க அதைச் செயலாக்குகிறோம். இதில் வணிகங்கள் உள்ளிட்ட பிற WhatsApp பயனர்களுடன் இணைப்பது மற்றும் தொடர்பு கொள்வதற்கான வழிகளை உங்களுக்கு வழங்குவதும் அடங்கும். இதில் ஒரு WhatsApp கணக்கை உருவாக்க உங்களிடமிருந்து தகவல்களைச் சேகரித்தல், WhatsApp வழியாக அணுகமுடிகிற வணிகங்களுடன் உங்களை இணைத்தல், எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்துவது குறித்த பகுப்பாய்வு, ஒரு தேவைக்குப் பதிலளிப்பதற்காக வாடிக்கையாளர் உதவியை வழங்குதல், அல்லது நீங்கள் உங்கள் கணக்கை மூடுவதாக இருந்தால் உங்கள் தரவுகளை நீக்குதல் ஆகியவை அடங்கும்.
- தகவல்தொடர்பு பரிமாற்றம்; பொதுப் போக்குவரத்து மேலாண்மை மற்றும் செயலிழப்புகளைத் தடுப்பது, கண்டறிதல், விசாரணை மற்றும் சரிசெய்தல் உள்ளிட்ட சேவைகளின் செயல்பாடு; மற்றும் பொருந்தும் இடத்தில் பில்லிங் போன்றவற்றிற்கு மெசேஜிங் மெட்டாடேட்டாவைப் பயன்படுத்துகிறோம்.
- எடுத்துக்காட்டாக, பல கணக்குகளைப் பயன்படுத்தும் ஸ்பாமர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம், எங்கள் சேவைகளின் பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த. எங்கள் சேவைகள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கும்போது அல்லது உங்கள் கணக்குடன் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டை பகுப்பாய்வு செய்யும் போது நீங்கள் வழங்கிய தரவைச் சரிபார்ப்பதும் இதில் அடங்கும்.
- எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் பத்திரப்படுத்தலை உறுதிப்படுத்த நாங்கள் செய்தியிடல் மெட்டாடேட்டாவைப் பயன்படுத்துகிறோம், இதில் அவற்றின் கிடைக்கும் தன்மை, மெய்மை, நம்பகத்தன்மை, இரகசியத்தன்மை ஆகியவை அடங்கும், குறிப்பாக பாதுகாப்பு சம்பவங்கள், பாதிப்புகள், தீம்பொருள் மற்றும் எதிர்மறையான காரணிகளைத் தடுப்பது, கண்டறிதல், விசாரணை செய்தல் மற்றும் சரிசெய்தல் ஆகியவை அடங்கும். ஸ்பாம் போன்ற எங்கள் சேவைகளின் கிடைக்கும் தன்மை அல்லது சேவைகள் அல்லது பயனர் சாதனங்களுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகல் போன்றவை அடங்கும். மேலும் அறிய, WhatsApp பாதுகாப்புப் பக்கத்தைப் பார்வையிடவும்.
- "எங்கள் உலகளாவிய செயல்பாடுகள்" என்பதன் கீழ் விவரிக்கப்பட்டுள்ளபடி அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் அல்லது பிரதேசங்கள் உட்படமூன்றாம் நாடுகளில் உங்கள் தரவை மாற்ற, அல்லது அனுப்ப, சேமிக்க அல்லது செயலாக்க.
- புதுப்பிப்பு குறித்த அறிவிப்பை உங்களுக்கு அனுப்புவது அல்லது எங்களைத் தொடர்பு கொள்கையில் பதிலளிப்பது போன்ற சேவைகள் தொடர்பாக உங்களுடன் தொடர்பு கொள்வதற்கு.
- பயன்படுத்தப்படும் தரவு வகைகள்: பயன்படுத்தப்படும் தரவு வகைகள்: இந்தத் தனியுரிமைக் கொள்கையின் "நீங்கள் வழங்கும் தகவல்கள்" பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள தகவல்களை நாங்கள் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறோம்.
இந்த நோக்கங்கள் ஒவ்வொன்றும், "நாங்கள் எவ்வாறு தகவல்களைப் பயன்படுத்துவோம்" மற்றும் "எங்கள் உலகளாவிய செயல்பாடுகள்" ஆகிய பகுதிகளின் கீழ் மேலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. GDPR-இன் கீழ் உங்களுடனான எங்கள் ஒப்பந்த உறவைச் செயல்படுத்தத் தேவையான அளவு, நீங்கள் வழங்கும் தரவை நாங்கள் செயலாக்கும்போது, தரவை புதிய சேவையாளருக்கு மாற்ற உங்களுக்கு உரிமையுண்டு. உங்கள் உரிமைகளைப் பிரயோகிக்க, தனியுரிமைக் கொள்கையில் உள்ள, "உங்கள் உரிமைகளை எப்படிப் பிரயோகிப்பது" என்ற பகுதியைப் பார்க்கவும்.
உங்கள் தரவைச் செயலாக்கும் போது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நாங்கள் சார்ந்துள்ள பிற சட்ட அடிப்படைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
உங்கள் ஒப்புதல்
நீங்கள் ஒப்புதல் வழங்கிய பிறகு கீழே விவரிக்கப்பட்ட நோக்கங்களுக்காக தரவை நாங்கள் செயலாக்குவோம். உங்கள் ஒப்புதலைச் சார்ந்தே நாங்கள் செயல்படுகிறோம்:
உங்கள் தரவுகளை ஏன், எப்படி செயலாக்குகிறோம்:
நீங்கள் இயக்கும் சாதனம்-சார்ந்த அமைப்புகளின் மூலம் தகவல்களைச் சேகரிக்கவும் பயன்படுத்தவும் (உங்கள் இருப்பிடம், கேமரா அல்லது புகைப்படங்களுக்கான அணுகல் போன்றவை) எங்களை அனுமதிக்கிறீர்கள், இதன் மூலம் நீங்கள் அமைப்புகளை இயக்கும்போது கேட்கப்பட்ட சேவைகளை நாங்கள் வழங்க முடியும்; எடுத்துக்காட்டாக, உங்கள் இருப்பிடத்தை தொடர்புகளுடன் பகிர்ந்து கொள்ள எங்கள் இருப்பிட அம்சங்களைப் பயன்படுத்தும் பட்சத்தில் உங்கள் சாதனத்தின் மிகச் சரியான இருப்பிடத்தைப் பகிர்ந்துகொள்ளுதல், அல்லது உங்கள் தொடர்புகளுடன் புகைப்படங்களையோ மீடியாவையோ பகிர்ந்துகொள்ள விரும்பி உங்கள் கேமரா அல்லது புகைப்பட கேலரியை அணுகுதல்.
- பயன்படுத்தப்படும் தரவு வகைகள்: நாங்கள் இந்த நோக்கத்திற்காக சாதனத்திலுள்ள தகவல்களை (உங்கள் இருப்பிடம், புகைப்படங்கள் மற்றும் ஊடகம் போன்ற, சாதனத்திலுள்ள தரவுகள்) பயன்படுத்துவோம்.
நாங்கள் உங்கள் ஒப்புதலின் அடிப்படையில் தரவைச் செயலாக்கும்போது, ஒப்புதலைத் திரும்பப் பெறுவதற்கு முன்னர், அந்த ஒப்புதலின் அடிப்படையில் செயலாக்கத்தின் சட்டப்பூர்வமான தன்மையைப் பாதிக்காமல், எந்த நேரமும் ஒப்புதலைத் திரும்பப் பெற உங்களுக்கு உரிமை உண்டு. நீங்கள் எங்களுக்கு வழங்கும் மற்றும் உங்கள் ஒப்புதலின் அடிப்படையில் நாங்கள் செயலாக்கும் தரவை இடமாற்றுவதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு. உங்கள் உரிமைகளைப் பயன்படுத்த, சாதன அடிப்படையிலான அமைப்புகள், செயலியில் உள்ள இருப்பிடக் கட்டுப்பாடு போன்ற செயலி அடிப்படையிலான அமைப்புகள் மற்றும் இந்தத் தனியுரிமைக் கொள்கையின் "உங்கள் உரிமைகளை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள்" பிரிவு ஆகியவற்றைப் பார்வையிடவும்.
ஒரு சட்டக் கடமைக்கு இணங்குதல்
உங்கள் தரவுகளை ஏன், எப்படி செயலாக்குகிறோம்:
தரவைச் செயலாக்குவதற்கு சட்டப்பூர்வ கோரிக்கைக்கு நாங்கள் இணங்கும்போது, எடுத்துக்காட்டாக, சில தரவுகளுக்கு சட்ட அமலாக்கத்தின் உத்தரவு போன்ற முறையான சட்ட ரீதியான கோரிக்கை இருந்தால் உங்கள் பெயர், சுயவிவரப் படம் அல்லது IP முகவரி போன்ற விசாரணை தொடர்பான தரவை வழங்க வேண்டியிருக்கும். சட்டப்பூர்வமான கடமைக்கேற்ப தரவை வெளியிடுவோம்.
உங்களின் அல்லது பிறரின் முக்கிய நலன்களைப் பாதுகாப்பது
உங்கள் தரவுகளை ஏன், எப்படி செயலாக்குகிறோம்:
உங்கள் அல்லது மற்றொரு நபரின் முக்கிய நலன்களைப் பாதுகாக்க தரவைச் செயலாக்குவதற்கு. இந்தச் செயலாக்கத்துக்கு நாங்கள் சார்ந்துள்ள முக்கிய நலன்கள் என்பதில், உங்களின் அல்லது பிறரின் உயிர், உடல் குறித்த இரகசியம், பந்தோபஸ்து ஆகியவற்றைப் பாதுகாப்பது ஆகியன அடங்கும், மேலும் தீங்கான செயலை முறியடிப்பதற்கும், பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் நம்பகத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் நாங்கள் இதைச் சார்ந்துள்ளோம், எடுத்துக்காட்டாக நாங்கள் தீங்கான நடத்தை குறித்த புகார்களை விசாரணை செய்யும்போது அல்லது ஒருவருக்கு உதவி தேவைப்படும் போது. இதில், அவசரநிலை ஏற்பட்டு தரவு கோரப்படும் போது மற்றும் ஒருவரின் உயிர் அல்லது பாதுகாப்பை காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ள போது சட்ட அமலாக்கத் துறைக்கு தரவுகளை வழங்கி பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் நம்பகத்தன்மையை ஊக்குவிப்பதும் அடங்கும், எடுத்துக்காட்டாக தாக்குதல் போன்ற உடனடியான கொடிய நடத்தைக்குரிய ஆபத்து அல்லது ஒரு நபரின் பாதுகாப்புக்கு ஆபத்து.
நியாயமான நலன்கள்
எங்கள் நியாயமான நலன்கள் அல்லது ஒரு மூன்றாம் தரப்பின் நியாயமான நலன்களை நாங்கள் சார்ந்துள்ளோம், எனினும் அது உங்கள் நலன்களையோ அடிப்படை உரிமைகளையோ சுதந்திரத்தையோ (“நியாயமான நலன்கள்”) பாதிப்பதாக இருக்கக் கூடாது:
உங்கள் தரவுகளை ஏன், எப்படி செயலாக்குகிறோம்:
தரவை ஒரு கட்டுப்படுத்தும் கருவியாகச் செயல்படுத்தும் சூழ்நிலைகளில், அளவீடு, பகுப்பாய்வுகள் மற்றும் பிற வணிகச் சேவைகளை வழங்குவதற்கு.
- முறையான ஆர்வங்கள் இயக்கப்படுவது:
- வணிகங்கள் மற்றும் இதர கூட்டாளர்களுக்கு துல்லியமான மற்றும் நம்பத்தகுந்த ஒட்டுமொத்த அறிக்கையை வழங்குதல், துல்லியமான விலை நிர்ணயத்தையும் செயல்திறன் குறித்த புள்ளிவிவரங்களையும் உறுதிசெய்தல், எங்கள் கூட்டாளர்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளும் மதிப்பை நிரூபித்துக் காட்டுதல்; மற்றும்
- வணிகங்கள் மற்றும் பிற கூட்டாளர்களின் நலன்களுக்காக, அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களைப் புரிந்துகொள்ளவும், வணிகங்களை மேம்படுத்தவும், எங்கள் விலையிடல் மாதிரிகளைச் சரிபார்க்கவும், அவர்களின் சேவைகள் மற்றும் மெசேஜ்களின் செயல்திறனையும் விநியோகத்தையும் மதிப்பிடவும், எங்கள் சேவைகளில் மக்கள் அவர்களைத் தொடர்பு கொள்வதைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றனர்.
- பயன்படுத்தப்படும் தரவு வகைகள்: இந்தத் தனியுரிமைக் கொள்கையின் " நீங்கள் வழங்கும் தகவல் ," "தானாகச் சேகரிக்கப்பட்ட தகவல்கள்" மற்றும் "மூன்றாம் தரப்புத் தகவல்கள்" ஆகிய பிரிவுகளில் விவரித்துள்ள தகவல்களை நாங்கள் இந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறோம்.
உங்களுக்கு சந்தையிடல் சார்ந்த தகவல்தொடர்புகளை வழங்குவதற்காக.
சட்ட அமலாக்கம் உட்பட பிறருடன் தகவல்களைப் பகிர மற்றும் சட்டக் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க. மேலும் தகவலுக்கு, சட்டம், எங்களுடைய உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பதில் உள்ள தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.
- முறையான ஆர்வங்கள் இயக்கப்படுவது:
- Facebook நிறுவன தயாரிப்புகளின் மோசடியான, அங்கீகாரமற்ற பயன்பாடு, எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளின் விதிமீறல்கள் அல்லது பிற தீங்கு விளைவிக்கும் அல்லது சட்டவிரோத செயல்பாடு போன்றவற்றைத் தடுக்க மற்றும் நிவர்த்தி செய்ய.
- புலன்விசாரணைகள் அல்லது ஒழுங்குமுறை விசாரணைகளின் போது உட்பட, எங்களை (எங்கள் உரிமைகள், உடமைகள் அல்லது தயாரிப்புகள் உட்பட), எங்கள் பயனர்களை அல்லது மற்றவர்களைப் பாதுகாப்பதற்கு; அல்லது மரணத்தையோ நேரடி உடல் தீங்கையோ தடுப்பதற்கு.
- பயன்படுத்தப்படும் தரவு வகைகள்: இந்தத் தனியுரிமைக் கொள்கையின் " நீங்கள் வழங்கும் தகவல்கள்," "தானாகச் சேகரிக்கப்பட்ட தகவல்கள்" மற்றும் "மூன்றாம் தரப்புத் தகவல்கள்" ஆகிய பிரிவுகளில் விவரித்துள்ள தகவல்களை நாங்கள் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறோம்.
பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்காக Facebook நிறுவனங்களுடன் தகவல்களைப் பகிர வேண்டும். மேலும் தகவல்களுக்கு, " பிற Facebook நிறுவனங்களுடன் நாங்கள் எவ்வாறு செயல்படுகிறோம்" என்பதையும் பார்க்கவும்.
இதுபோன்ற செயலாக்கத்தை மறுக்கவும் அதைத் தடுப்பதற்கான வழியை நாடவும் உங்களுக்கு உரிமை உள்ளது, உங்கள் உரிமைகளைப் பயன்படுத்த தனியுரிமைக் கொள்கையின் பிரிவு "உங்கள் உரிமைகளைச் செயலாக்குவது எப்படி" என்பதைப் பார்வையிடவும்.
பொது நலன் கருதி மேற்கொள்ளப்படும் பணிகள்
உங்கள் தரவுகளை ஏன், எப்படி செயலாக்குகிறோம்:
"நாங்கள் எவ்வாறு தகவல்களைப் பயன்படுத்துகிறோம்" பிரிவின் கீழ் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளபடி ஆராய்ச்சி மேற்கொள்ளவும் பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும், இது பொது நலனில் அவசியமாகும், மேலும் பொருத்தமான சட்டத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது (எ.கா. ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தில்).
இந்த அடிப்படையில் செயலாக்கத்தை மேற்கொள்ளும்போது, பொருத்தமான வகையில் நாங்கள் வெளிப்படைதன்மையுடன் இருப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை எடுப்போம்.
பொது நலன் கருதி மேற்கொள்ளப்படும் ஒரு பணிக்குத் தேவையான உங்கள் தரவுகளை நாங்கள் செயலாக்கும் போது, எங்களது செயலாக்கத்துக்கு மறுப்புத் தெரிவிக்கவும் தடை கோரவும் உங்களுக்கு உரிமையுண்டு. உங்கள் உரிமைகளைப் பிரயோகிக்க, தனியுரிமைக் கொள்கையில் உள்ள, "உங்கள் உரிமைகளை எப்படிப் பிரயோகிப்பது" என்ற பகுதிக்குச் செல்லவும்.
மேலே செல்லவும்
உங்கள் உரிமைகளை எப்படிப் பிரயோகிப்பது
பொருந்தும் தரவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உங்கள் தகவல்களை அணுக, சரிசெய்ய, மாற்ற மற்றும் அழிக்க உங்களுக்கு உரிமையுண்டு, மேலும் உங்கள் தகவலின் சில செயலாக்கத்தை கட்டுப்படுத்தவும் எதிர்க்கவும் உங்களுக்கு உரிமையுண்டு.
நேரடிச் சந்தைப்படுத்தலில் உள்ள உங்கள் தகவல்களை நாங்கள் செயலாக்குவதை எதிர்க்கும் உரிமையும், நாங்கள் பொது நலன் கருதி ஒரு பணியைச் செய்யும்போதோ எங்களது அல்லது மூன்றாம் தரப்பினரது நியாயமான நலன்களைப் பூர்த்திசெய்யும் போதோ உங்கள் தகவல்களை நாங்கள் செயலாக்குவதை எதிர்க்கும் உரிமையும் இதில் அடங்கும். மறுப்பை மதிப்பீடு செய்யும்போது, எங்கள் பயனர்களின் நியாயமான எதிர்பார்ப்புகள், உங்களுக்கு, எங்களுக்கு, பிற பயனர்களுக்கு, மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் ஆபத்துகள் மற்றும் அதே நோக்கத்தை அடைவதற்கு, முறையின்றி நுழைதல் மற்றும் அத்துமீறல் முயற்சி தேவைப்படாத மற்ற வழிகள் உட்பட பல காரணிகளைக் கருத்தில் கொள்வோம். தகவல்களைச் செயலாக்குவது கட்டாயமான சட்ட விதிகளின் அடிப்படையில் இருந்தாலன்றி அல்லது சட்டக் காரணங்களுக்காகத் தேவைப்பட்டாலன்றி, மற்ற சூழ்நிலையில் உங்கள் மறுப்பு உறுதிசெய்யப்பட்டு, உங்கள் தகவல்களைச் செயலாக்குவது நிறுத்தப்படும்.
உங்கள் தகவல்களை நாங்கள் செயலாக்குவதை நீங்கள் எதிர்க்கலாம் மற்றும் இங்கே சென்று உங்கள் தகவலை பயன்படுத்தும் முறையை கட்டுப்படுத்த உங்கள் விருப்பங்களைப் பற்றி அறியலாம். நேரடிச் சந்தைப்படுத்தல் செய்ய உங்கள் தகவலை நாங்கள் பயன்படுத்தும் இடத்தில், இதுபோன்ற தொடர்புகளில் குழுவிலகல் இணைப்பைப் பயன்படுத்தி அல்லது எங்கள் செயலியில் உள்ள "தடுப்பு" அம்சத்தைப் பயன்படுத்தி எதிர்கால நேரடிச் சந்தைப்படுத்தல் மெசேஜ்களை எதிர்க்கலாம் மற்றும் தவிர்க்கலாம்.
எங்கள் செயலியில் உள்ள கணக்கு தகவல் கோரல் அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் தகவலை அணுகலாம் அல்லது மாற்றலாம் (அமைப்புகள் > கணக்கு என்பதன் கீழ் கிடைக்கும்). "உங்கள் தகவலை நிர்வகித்தல் மற்றும் சேமித்துவைத்தல்" என்ற பகுதியில் உள்ள விவரப்படி செயலிக்கு உள்ளே நேரடியாக உங்கள் தகவல்களை சரிசெய்ய, புதுப்பிக்க மற்றும் அழிக்க கருவிகளை அணுகலாம்.
நாங்கள் உங்கள் ஒப்புதலின் அடிப்படையில் தரவைச் செயலாக்கும்போது, ஒப்புதலைத் திரும்பப் பெறுவதற்கு முன்னர், அந்த ஒப்புதலின் அடிப்படையில் செயலாக்கத்தின் சட்டப்பூர்வமான தன்மையைப் பாதிக்காமல், எந்த நேரமும் ஒப்புதலைத் திரும்பப் பெற உங்களுக்கு உரிமை உண்டு. ஒப்புதலைத் திரும்பப் பெற, உங்கள் சாதன அடிப்படை அல்லது செயலி அமைப்புகளைப் பார்வையிடவும்.
WhatsApp-இன் முதன்மை மேற்பார்வை ஆணையம், அயர்லாந்தின் தரவுப் பாதுகாப்பு ஆணையம் அல்லது உங்கள் உள்ளூர் மேற்பார்வை ஆணையத்திடம் புகாரைப் பதிவுசெய்வதற்கும் உங்களுக்கு உரிமையுண்டு.
மேலே செல்லவும்
உங்கள் தகவல்களை நிர்வகித்தல் மற்றும் சேமித்துவைத்தல்
தனியுரிமைக் கொள்கையில் காணப்படும் நோக்கத்துக்காக, எங்கள் சேவைகளை வழங்குவது உட்பட, சட்டப்பூர்வமான கடமைகளுக்கு இணங்குவது, எங்கள் விதிமுறைகளை மீறுவது மற்றும் தடுப்பது, அல்லது எங்கள் உரிமைகள், சொத்து மற்றும் பயனர்களைப் பாதுகாத்தல் போன்ற பிற நியாயமான நோக்கங்களுக்காகத் தகவல்களைச் சேமிக்கிறோம். சேமிப்பக காலங்கள் தனி வழக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அவை தகவலின் தன்மை, காரணம், தொடர்புடைய சட்ட அல்லது செயல்பாட்டு தக்கவைப்பு தேவைகள் மற்றும் சட்டபூர்வமான கடமைகள் போன்ற காரணிகளைப் பொறுத்தது.
சட்டப் பொறுப்புகள் மற்றும் சிக்கல்கள். நாங்கள் சட்டக் காரணங்களுக்காகவும் உங்கள் தகவல்களை வைத்திருப்போம், எடுத்துக்காட்டாக தரவுகளைச் சேமித்து வைப்பதற்கான சட்டக் கடமை, எங்கள் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் அவற்றின் மீறல்களைத் தடுத்தல், அல்லது அவசியமிருப்பின் உரிமைகள், உடமைகள் மற்றும் பயனர்களைப் பாதுகாத்தல். எங்களது "சட்டம், எங்கள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு" என்ற பகுதியில் இதுபற்றி மேலும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
செயல்பாடு ரீதியாக சேமித்துவைப்பதன் தேவைகள். எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகளை வழங்கும்போது உங்கள் மெசேஜ்களை நாங்கள் சேமித்துவைக்க மாட்டோம் (மேலே குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளைத் தவிர), எனவே உங்கள் மெசேஜ்கள் வழங்கப்பட்டதும் அவை எங்கள் சேவையகங்களிலிருந்து நீக்கப்படும். இருப்பினும், மேலே சொன்னபடி, ஒரு மெசேஜை உடனே வழங்க முடியாவிட்டால், அதை வழங்க முயற்சிக்கும்போது 30 நாட்கள் வரை அதை எங்கள் சேவையகங்களில் மறையாக்கப்பட்ட வடிவத்தில் வைத்திருப்போம், அதன் பிறகு அது நீக்கப்படும்.
மெசேஜிங் மெட்டாடேட்டாவை நீக்குதல். தகவல்தொடர்புப் பரிமாற்றம், சேவைகளை இயக்குவது, சேவைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வது, பில்லிங் செய்வது (பொருந்தும் சூழ்நிலையில்) அல்லது பொருந்தும் சட்டத்தின் கீழ் கடமைகளுக்கு இணங்குவது ஆகியவற்றுக்கு இனி தேவைப்படாத போது மெசேஜிங் மெட்டாடேட்டா நீக்கப்படும் அல்லது அநாமதேயமாக்கப்படும்.
உங்கள் தகவல்களை மேலும் நிர்வகிக்க, மாற்ற, கட்டுப்படுத்த அல்லது நீக்க விரும்பினால், பின்வரும் கருவிகள் வழியாக அதைச் செய்யலாம்:
- சேவைகளின் அமைப்புகள். பிற பயனர்களுக்குக் கிடைக்கும் சில தகவல்களை நிர்வகிக்க உங்கள் சேவைகளின் அமைப்புகளை நீங்கள் மாற்றலாம். உங்கள் தொடர்புகள், குழுக்கள் மற்றும் பிராட்காஸ்ட் பட்டியல்களை நிர்வகிக்கலாம் அல்லது எங்கள் "தடுப்பு" அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் யாருடன் தொடர்பு கொள்கிறீர்கள் என்பதை நிர்வகிக்கலாம்.
- உங்கள் கைபேசி எண், சுயவிவரப் பெயர் மற்றும் படம் மற்றும் "விவரம்" சார்ந்த தகவல்களை மாற்றுதல். உங்கள் மொபைல் எண்ணை மாற்றினால், எங்கள் செயலியில் உள்ள எண் மாற்றம் அம்சத்தைப் பயன்படுத்தி அதைப் புதுப்பித்து, உங்கள் கணக்கை உங்கள் புதிய மொபைல் எண்ணுக்கு மாற்ற வேண்டும். மேலும், எந்த நேரத்திலும் உங்கள் சுயவிவரப் பெயர், சுயவிவரப் படம் மற்றும் "விவரம்" சார்ந்த தகவல்களையும் மாற்றலாம்.
- WhatsApp கணக்கை நீக்குதல். எங்கள் செயலியில் உள்ள ‘எனது கணக்கை நீக்கு’ அம்சத்தைப் பயன்படுத்தி எந்த நேரத்திலும் உங்கள் WhatsApp கணக்கை நீக்கலாம். உங்கள் கணக்கு நீக்கல் செயல்முறை தொடங்கியதும், அந்தக் கணக்கை இனி பயன்படுத்த முடியாது (அதாவது., உள்நுழையவோ அல்லது மீண்டும் பதிவு செய்யவோ முடியாது).
உங்கள் கணக்கை நீக்கும்போது உங்கள் தகவல்கள் என்ன ஆகும்?
WhatsApp கணக்கை நீக்கும்போது, எங்களிடம் உள்ள உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் நீக்குகிறோம், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டும் கீழே பட்டியலிடப்பட்டுள்ள தகவல்களை நாங்கள் சேமித்து வைப்போம்.
நீக்கப்பட்ட தகவல்கள். வழங்கப்படாத மெசேஜ்கள், உங்கள் கணக்குத் தகவல் மற்றும் சுயவிவரப் புகைப்படம் போன்றவை சேவையகங்களிலிருந்து நீக்கப்படும். நீங்கள் எல்லா WhatsApp குழுக்களிலிருந்தும் அகற்றப்படுவீர்கள். WhatsApp தகவலை நீக்க, அந்த நீக்கும் செயல்முறையின் தொடக்கத்திலிருந்து 90 நாட்கள் வரை ஆகும் என்பதை கவனத்தில் கொள்ளவும். பேரழிவு, மென்பொருள் பிழை அல்லது பிற தரவு இழப்பு நிகழ்வு ஏற்படும்போது இழந்த தரவை மீட்டெடுக்க நாங்கள் பயன்படுத்தும் காப்புப்பிரதி சேமிப்பகத்தில் 90 நாட்களுக்குப் பிறகும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்கள் தகவல்களின் நகல்கள் இருக்கலாம்.
நாங்கள் சேமித்துவைக்கும் தகவல்கள்
- சில சூழ்நிலைகளில், சேவைகளின் பாதுகாப்பைப் பராமரிக்க, ஒரு பாதுகாப்பு நிகழ்வு அல்லது பாதிப்பு குறித்து பகுப்பாய்வு செய்ய/விசாரிக்க வழக்கமான சேமித்துவைத்தல் காலத்தையும் கடந்து சில பதிவுகளை நாங்கள் சேமித்துவைக்க வேண்டியிருக்கும்.
- சில குறிப்பேட்டுப் பதிவுகள் போன்ற சில உள்ளடக்கத்தின் நகல்கள் எங்கள் தரவுத்தளத்திலேயே இருக்கும், ஆனால் அவை தனிப்பட்ட அடையாளங்காட்டியிலிருந்து பிரிக்கப்பட்டவை மற்றும் அதற்குமேல் உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்காது. உங்கள் கணக்கிலிருந்து இத்தரவைப் பிரிக்க, பயனர் அடையாளங்காட்டியை, உங்கள் கணக்கில் மீண்டும் இணைக்க முடியாவாறு தோராயமான மாற்றீடு கொண்டு மாற்றுவோம்.
- தரவைத் தக்கவைக்க சட்டப்பூர்வமான கடமை இருக்கும்போது, விதிமுறைகளை மீறுவது , தடுப்பது அல்லது எங்கள் உரிமை, சொத்து மற்றும் பயனர்களின் பாதுகாப்புக்கு தேவைப்பட்டால் சில தகவல்களின் நகல்கள் தக்கவைக்கப்படலாம். எங்களது "சட்டம், எங்கள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு" என்ற பகுதியில் இதுபற்றி மேலும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
எங்கள் செயலியில் உள்ள ‘எனது கணக்கை நீக்கு’ அம்சத்தைப் பயன்படுத்தாமல் உங்கள் சாதனத்திலிருந்து WhatsApp செயலியை நீக்கினால் மட்டுமே உங்கள் தகவல்கள் நீண்ட காலம் எங்களிடம் சேமித்து வைக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். உங்கள் கணக்கை நீக்கிவிடும் போது, நீங்கள் உருவாக்கிய குழுக்கள் தொடர்பான உங்கள் தகவல்களையோ அல்லது பிற பயனர்களுக்கு நீங்கள் அனுப்பிய மெசேஜ்களின் நகல் போன்று உங்கள் தொடர்பாக அவர்களிடம் உள்ள தகவல்களையோ இது பாதிக்காது என்பதை நினைவில் கொள்க.
எங்கள் தரவு நீக்குதல் மற்றும் சேமித்தல் நடைமுறைகள் குறித்தும் உங்கள் கணக்கை எப்படி நீக்குவது என்பது குறித்தும் மேலும் அறிவதற்கு, எங்கள் Android, iPhone, அல்லது KaiOS உதவி மையக் கட்டுரைகளைப் பார்க்கவும்.
மேலே செல்லவும்
சட்டம், எங்கள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு
"நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்" என்ற பகுதியில் விவரிக்கப்பட்டுள்ள உங்கள் தகவல்களை அணுகுவோம், பாதுகாத்து வைப்போம் மற்றும் பகிர்ந்து கொள்வோம். இதில், "தரவுகளைச் செயலாக்குவதற்கான எங்கள் சட்ட அடிப்படை" என்ற பகுதிக்கேற்ப ஒழுங்குமுறையாளர்கள், சட்ட நிறைவேற்ற அமைப்புகள், இதர அரசு அமைப்புகள், தொழில்துறைக் கூட்டாளர்கள் உள்ளிட்ட இன்ன பிறருடன் பகிர்ந்து கொள்வதும் அடங்கும். எனினும், பின்வரும் அவசியம் உள்ளதாக நன்னம்பிக்கையின் பேரில் நாங்கள் கருதினாலே இது செய்யப்படும்: (அ) பொருந்துகிற சட்டம் அல்லது விதிமுறைகள், சட்ட நடைமுறைகள் அல்லது அரசின் கோரிக்கைகள் நிமித்தமாக பதிலளித்தல்; (ஆ) சாத்தியமான விதிமீறல்கள் குறித்த புலன்விசாரணைகளுக்கு உட்பட, எங்கள் விதிமுறைகளையும் வேறு ஏதேனும் பொருந்துகிற விதிமுறைகள் மற்றும் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்துதல்; (இ) மோசடி மற்றும் இதர சட்டவிரோதச் செயல்பாடுகள் அல்லது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களை கண்டறிதல், புலன்விசாரித்தல், தடுத்தல் அல்லது அவற்றுக்குத் தீர்வளித்தல்; அல்லது (ஈ) மரணம் அல்லது நேரடி உடல் தீங்கு உட்பட, எங்கள் பயனர்கள், WhatsApp, Facebook நிறுவனங்கள், அல்லது பிறரின் உரிமைகள், உடமைகள் மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காத்தல்.
சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து இந்தச் செயலாக்கத்தை மேற்கொள்ள நாங்கள் சார்ந்துள்ள வெவ்வேறு சட்ட அடிப்படைகள் பற்றி மேற்கொண்டு தகவல்களை "தரவை செயலாக்குவதற்கான எங்கள் சட்ட அடிப்படை" என்ற பகுதியில் வழங்கியுள்ளோம். அதில், “விதிமுறைகளுக்கு ஏற்ப சேவைகளை வழங்குதல்”, “நியாயமான நலன்கள்”, “முக்கிய நலன்கள்” ஆகிய தலைப்புகளின் கீழுள்ள தகவல்களும் உட்படும்.
மேலே செல்லவும்
எங்கள் உலகளாவிய செயல்பாடுகள்
WhatsApp இந்தத் தனியுரிமைக் கொள்கை மற்றும் எங்கள் விதிமுறைகளுக்கு ஏற்ப, Facebook நிறுவனங்களுக்கு உள்ளேயும் மற்றும் எங்கள் கூட்டாளர்களுடனும் உலகளவில் நீங்கள் தொடர்புகொள்பவர்களுடனும் என உலகளாவிய அளவில் தகவலைப் பகிர்ந்துகொள்கிறது.
இந்தத் தனியுரிமைக் கொள்கையில் உள்ள நோக்கங்களுக்காக, நீங்கள் வசிக்கும் இடத்திற்கு வெளியே அமெரிக்கா அல்லது பிற மூன்றாம் நாடுகளுக்கு WhatsApp-ஆல் கட்டுப்படுத்தப்படும் தகவல்கள் கைமாற்றப்படும் அல்லது அனுப்பப்படும், அல்லது சேமிக்கப்படும் மற்றும் செயலாக்கப்படும். அமெரிக்காவில் உள்ளவை உட்பட, Facebook இன் உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையங்களை WhatsApp பயன்படுத்துகிறது.
இந்தக் கைமாற்றங்களானது விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளை வழங்கவும், உலகளவில் எங்கள் சேவைகளை இயக்கி உங்களுக்கு வழங்கவும் அவசியமானவை. மூன்றாம் தரப்பு நாடுகளுக்கான இடமாற்றங்களுக்கு, நாங்கள் ஐரோப்பிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையான ஒப்பந்தத் துணைவிதிகளை பயன்படுத்துகிறோம் (இவை என்னென்ன என்பதன் விளக்கத்தை இங்கே காண்க), அல்லது சில நாடுகளைப் பற்றிய ஐரோப்பிய ஆணையத்தின் போதுமான முடிவுகளை சார்ந்துள்ளோம், இதன் மூலம் ஒரு மூன்றாம் தரப்பு நாடு, பிராந்தியம், அல்லது அந்த மூன்றாம் தரப்பு நாட்டில் உள்ள ஒன்று அல்லது கூடுதலான குறிப்பிட்ட துறைகள் போதியளவு பாதுகாப்பை உறுதிசெய்கின்றன என்பதை, அல்லது உரிய விதத்தில் பொருந்தும் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நிகரான வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன என்பதை ஐரோப்பிய ஆணையம் அங்கீகரிக்கிறது. ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியிலிருந்து அமெரிக்காவிற்கு கைமாற்றப்படும் தரவுகளுக்கு, நிலையான ஒப்பந்த விதிகளைச் சார்ந்துள்ளோம்.
மேலே செல்லவும்
கொள்கைப் புதுப்பிப்புகள்
எங்கள் தனியுரிமைக் கொள்கையை நாங்கள் மாற்றலாம் அல்லது புதுப்பிக்கலாம். இந்தத் தனியுரிமைக் கொள்கையில் ஏற்படுத்தப்படும் திருத்தங்களை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம், மேலும் இந்த கொள்கையின் மேலே உள்ள "கடைசியாக மாற்றியமைக்கப்பட்ட" தேதியைப் புதுப்பிப்போம். அவ்வப்போது எங்கள் தனியுரிமைக் கொள்கையை படித்துப் பார்க்கவும்.
மேலே செல்லவும்
எங்களைத் தொடர்புகொள்ளவும்
WhatsApp தரவுப் பாதுகாப்பு அதிகாரியை இங்கே தொடர்பு கொள்ளலாம்.
எங்கள் தனியுரிமைக் கொள்கை பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது இந்த முகவரிக்கு கடிதம் எழுதுங்கள்:
WhatsApp Ireland Limited
கவனத்திற்கு: Privacy Policy
4 Grand Canal Square
Grand Canal Harbour
Dublin 2
Ireland
மேலே செல்லவும்