அமலாக்க தேதி: ஜனவரி 4, 2021 (காப்பகப்படுத்திய பதிப்புகள்)
உள்ளடக்கம்
நீங்கள் ஐரோப்பிய பிராந்தியத்தில் வசிப்பவர் என்றால், WhatsApp Ireland Limited இந்த சேவை விதிமுறைகள், மற்றும் தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றின் கீழ் உங்களுக்கு சேவைகளை வழங்குகிறது.
நீங்கள் UKவில் வசிக்கிறீர்கள் என்றால், WhatsApp LLC ஆனது இந்த சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை ஆகியவற்றின் கீழ் உங்களுக்கு சேவைகளை வழங்குகிறது.
எங்கள் செயலிகள், சேவைகள், அம்சங்கள், மென்பொருள் அல்லது இணையதளம் மூலம் எங்கள் சேவைகளை (கீழே வரையறுத்தபடி) வழங்க, எங்கள் சேவை விதிமுறைகளுக்கு ("விதிமுறைகள்") உங்கள் சம்மதத்தை நாங்கள் பெற வேண்டும்.
நீங்கள் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியில் உள்ள ஒரு நாட்டில் அல்லது பிராந்தியத்தில் (இதில் ஐரோப்பிய ஒன்றியம் அடங்கும்) மற்றும் வேறெந்த உட்படுத்தப்பட்ட நாட்டில் அல்லது பிராந்தியத்தில் (கூட்டாக "ஐரோப்பிய பிராந்தியம்" என குறிப்பிடப்படுகிறது) வசித்தால் தவிர, WhatsApp LLC ("WhatsApp " "எங்கள்," "நாங்கள்" அல்லது "எங்களுக்கு") கீழே விவரிக்கப்பட்ட சேவைகளை ("சேவைகள்") உங்களுக்கு வழங்குகிறது.
அவசரகால சேவைகளுக்கு அணுகல் இல்லை எங்கள் சேவைகள் அல்லது வணிக சேவைகள் மற்றும் உங்கள் மொபைல் போன் மற்றும் ஒரு நிலையான தொலைபேசி மற்றும் SMS சேவைகளுக்கு இடையே முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. எங்கள் சேவைகள் போலீஸ், தீயணைப்புத் துறைகள் அல்லது மருத்துவமனைகள் உள்ளிட்ட அவசரகால சேவைகள் அல்லது அவசரகால சேவை வழங்குநர்களுக்கான அணுகலை வழங்காது, அல்லது பொது பாதுகாப்பு பற்றி பதில் அளிக்கும் இடங்களுடன் இணைக்கப்படவில்லை. ஒரு கைபேசி, நிலையான தொலைபேசி அல்லது பிற சேவை மூலம் உங்களுக்குத் தேவையான அவசரகாலச் சேவை வழங்குநர்களை தொடர்புகொள்ள முடிகிறது என்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
நீங்கள் அமெரிக்கா அல்லது கனடாவில் உள்ள WhatsApp பயனராக இருந்தால், எங்கள் விதிமுறைகளில் ஒரு கட்டாய பிணக்குத் தீர்த்தல் துணைவிதி இருக்கும். அதன்படி, நீங்கள் சேவையிலிருந்து வெளியேறினால் மற்றும் சில குறிப்பிட்ட வகை பிணக்குகளைத் தவிர்த்து நீங்களும் WhatsApp நிறுவனமும் அனைத்துப் பிணக்குகளுக்கும் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளன) கட்டாய தனிநபர் பிணைக்குத் தீர்த்தல் மூலம் தீர்வுகாணச் சம்மதிக்கிறீர்கள், அப்படியென்றால் அந்தப் பிணக்குகளை ஒரு நீதிபதி அல்லது நீதிபதிக் குழு மூலம் தீர்மானிக்கும் எவ்வொரு உரிமையையும் நீங்கள் கைவிடுகிறீர்கள் என்று அர்த்தம், மேலும் வகுப்புசார் நடவடிக்கைகள், வகுப்புசார் பிணக்குத் தீர்த்தல்கள் அல்லது பிரதிநிதித்துவ நடவடிக்கைகளில் பங்கெடுக்கும் உங்கள் உரிமையையும் கைவிடுகிறீர்கள் என்று அர்த்தம். மேலும் அறிவதற்கு, கீழே “அமெரிக்கா அல்லது கனடா பயனர்களுக்கான சிறப்புப் பிணக்குத் தீர்த்தல் ஏற்பாடு” என்ற பகுதியை வாசிக்கவும்.
பதிவு. நீங்கள் எங்கள் சேவைகளுக்குப் பதிவுசெய்ய, துல்லியமான தகவல்களைப் பயன்படுத்த வேண்டும், உங்கள் தற்போதைய கைபேசி எண்ணை வழங்க வேண்டும், மேலும் நீங்கள் அதை மாற்றினால், எங்கள் செயலியில் உள்ள எண் மாற்ற அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் கைபேசி எண்ணைப் புதுப்பிக்க வேண்டும். நீங்கள் எங்கள் சேவைகளுக்குப் பதிவுசெய்வதற்கு, குறியீடுகளுடனான டெக்ஸ்ட் மெசேஜ்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை (எங்களிடமிருந்து அல்லது எங்கள் மூன்றாம் தரப்பு வழங்குநர்களிடமிருந்து) பெற சம்மதிக்கிறீர்கள்.
முகவரிப் புத்தகம். நீங்கள் தொடர்புப் பதிவேற்ற அம்சத்தைப் பயன்படுத்தலாம், மற்றும் பொருந்தும் சட்டங்கள் அனுமதித்தால் எங்கள் சேவைகளின் பயனர்கள் மற்றும் உங்கள் பிற தொடர்புகள் உட்பட, உங்கள் மொபைல் முகவரிப் புத்தகத்தில் உள்ள கைபேசி எண்களை தொடர்ந்து எங்களுக்கு வழங்கலாம். எங்கள் தொடர்புப் பதிவேற்ற அம்சம் பற்றி இங்கு மேலும் அறிக.
வயது. எங்கள் சேவைகளைப் பதிவுசெய்து பயன்படுத்த உங்களுக்கு குறைந்தபட்சம் 13 வயதாகி இருக்க வேண்டும் (அல்லது பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் எங்கள் சேவைகளைப் பதிவுசெய்து பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்துக்கு உங்கள் நாட்டில் அல்லது பிராந்தியத்தில் விதிக்கப்படும் இதைவிடக் கூடுதல் வயது ஆகியிருக்க இருக்க வேண்டும்). பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் எங்கள் சேவைகளைப் பயன்படுத்த குறைந்தபட்ச வயது அவசியம் என்பது மட்டுமல்லாமல், உங்கள் நாட்டில் அல்லது பிராந்தியத்தில் உள்ள எங்கள் விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கான அதிகாரத்துக்குரிய போதுமான வயது உங்களுக்கு இல்லாவிட்டால், உங்கள் சார்பாக உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எங்கள் விதிமுறைகளை ஏற்க வேண்டும். உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் இந்த விதிமுறைகளை உங்களுடன் சேர்ந்து படிக்குமாறு கேட்டுக்கொள்ளுங்கள்.
சாதனங்கள் மற்றும் மென்பொருள். எங்கள் சேவைகளைப் பயன்படுத்த நீங்கள் சில சாதனங்கள், மென்பொருள் மற்றும் தரவு இணைப்புகளை வழங்க வேண்டும், இல்லையெனில் அவற்றை நாங்கள் வழங்க மாட்டோம். நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்த, எங்கள் சேவைகளுக்கான புதுப்பிப்புகளை கைமுறையாக அல்லது தானியங்கி முறையாகப் பதிவிறக்கி நிறுவ ஒப்புதல் அளிக்கிறீர்கள். எங்கள் சேவைகளை உங்களுக்கு வழங்கத் தேவையான படி, அவ்வப்போது உங்களுக்கு அறிவிப்புகளை நாங்கள் அனுப்புவதற்கும் நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள்.
கட்டணங்கள் மற்றும் வரிகள். எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவது சார்ந்த அனைத்து கேரியர் தரவுத் திட்டங்கள், இணையத்திற்கான கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் மற்றும் வரிகளும் உங்கள் பொறுப்பு.
WhatsApp உங்கள் தனியுரிமையில் அக்கறை கொண்டுள்ளது. WhatsApp-இன் தனியுரிமைக் கொள்கை எங்கள் தரவு (மெசேஜ் உட்பட) நடைமுறைகளை விவரிக்கிறது. இதில், நாங்கள் உங்களிடமிருந்து பெறும் மற்றும் சேகரிக்கும் தகவலின் வகைகள், இந்தத் தகவலை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் மற்றும் பகிர்ந்து கொள்கிறோம் என்பது, உங்களைப் பற்றிய தகவல்களை செயலாக்குவது தொடர்பான உங்கள் உரிமைகள் ஆகியவை உட்படும்.
எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகள். எங்கள் விதிமுறைகள் மற்றும் பதிவிடப்பட்ட கொள்கைகளின்படி நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் எங்கள் விதிமுறைகள் அல்லது கொள்கைகளை மீறினால், உங்கள் கணக்கை முடக்குவது அல்லது நிறுத்தி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கலாம், நாங்கள் அவ்வாறு செய்தால் எங்கள் அனுமதியின்றி மற்றொரு கணக்கை உருவாக்க மாட்டேன் என்று நீங்கள் சம்மதம் அளிக்கிறீர்கள். உங்கள் கணக்கை முடக்குவது அல்லது நிறுத்தி வைப்பது கீழேயுள்ள “நிறுத்துதல்” பகுதிக்கு ஏற்ப அமைந்திருக்கும்.
சட்டப்பூர்வமான மற்றும் ஏற்கத்தக்க பயன்பாடு. நீங்கள் எங்கள் சேவைகளை சட்டப்பூர்வமான, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ஏற்கத்தக்க நோக்கங்களுக்காக மட்டுமே அணுக வேண்டும் மற்றும் பயன்படுத்த வேண்டும். எங்கள் சேவைகளை நீங்கள் கீழ்கண்ட வழிகளில் பயன்படுத்த (அல்லது பிறர் பயன்படுத்துவதற்கு உதவ) மாட்டீர்கள்: (அ) WhatsApp, எங்கள் பயனர்கள் அல்லது பிறரின் தனியுரிமை, விளம்பரம், அறிவுசார் சொத்து அல்லது பிற தனியுடமை உரிமைகள் உள்ளிட்ட உரிமைகளை மீறுதல், தவறாகப் பயன்படுத்துதல் அல்லது அத்துமீறுதல்; (ஆ) சட்டவிரோதமான, ஆபாசமான, கேவலப்படுத்துகிற, அச்சுறுத்துகிற, மிரட்டி அடக்குகிற, தொல்லை தருகிற, வெறுப்பூட்டுகிற, இன அல்லது இனக்குழு ரீதியாக புண்படுத்துகிற வழிகளில், அல்லது வன்முறையான குற்றங்களை ஊக்குவிப்பது, குழந்தைகளையோ பிறரையோ ஆபத்துக்கு ஆளாக்குவது அல்லது சுரண்டுவது அல்லது தீங்கான செயலை ஒருங்கிணைப்பது போன்ற சட்டவிரோதமான அல்லது மற்றபடி தகாத நடத்தையைத் தூண்டுதல் அல்லது ஊக்குவித்தல்; (இ) பொய்கள், போலி அடையாளங்கள் அல்லது திசைதிருப்புகிற வாசகங்களை வெளியிடுவதில் ஈடுபடுதல்; (ஈ) ஆள்மாறாட்டம்; (உ) மொத்தமான மெசேஜ்கள், தானியங்கி மெசேஜ்கள், ஆட்டோ-டயலிங் உள்ளிட்ட ஏனையவை போன்ற சட்டவிரோதமான அல்லது அனுமதியற்ற தகவல்தொடர்புகளை அனுப்புவதில் ஈடுபடுதல்; மற்றும் (ஊ) எங்களால் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தால் தவிர மற்றபடி, ஏதேனும் தனிப்பட்டவர்-சாராத வகையில் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துதல்.
WhatsApp அல்லது எங்கள் பயனர்களுக்கு பாதிப்பு. நீங்கள் எங்கள் சேவைகளை அனுமதியற்ற அல்லது அங்கீகாரமற்ற முறைகளிலோ, அல்லது எங்களை, எங்கள் சேவைகளை, சிஸ்டங்களை, எங்கள் பயனர்களை அல்லது பிறரை சுமைக்கு ஆளாக்கும், பாழாக்கும் அல்லது பாதிக்கும் வழிகளிலோ நேரடியாக, மறைமுகமாக, தானியங்கி அல்லது பிற வழிமுறைகள் மூலமாக அணுகுவது, பயன்படுத்துவது, நகலெடுப்பது, தகவமைப்பது, மாற்றியமைப்பது, அவற்றின் அடிப்படையில் துணை ஆக்கங்களை உருவாக்குவது, விநியோகிப்பது, உரிமம் அளிப்பது, துணை உரிமம் அளிப்பது, கைமாற்றுவது, காட்சிப்படுத்துவது, மேற்கொள்வது அல்லது மற்றபடி சுரண்டலுக்கு ஆளாக்குவது (அல்லது இவற்றைச் செய்ய பிறருக்கு உதவியளிப்பது) கூடாது, இதில் பின்வருபவற்றை நேரடியாகவோ தானியங்கி வழிமுறைகளிலோ செய்வதும் கூடாது: (அ) எங்கள் சேவைகளை ‘கழற்றிப் பார்ப்பது’, மாற்றுவது, மாற்றியமைப்பது, டீகம்பைல் செய்வது, அவற்றிலிருந்து துணை ஆக்கங்களை உருவாக்குவது அல்லது நிரலைப் பிரித்தெடுப்பது; (ஆ) எங்கள் சேவைகள் வழியாகவோ அவற்றுக்கோ அவற்றிலோ வைரஸ்களை அல்லது இன்னபிற கொடிய கணினி நிரல்களை அனுப்புவது, சேமிப்பது அல்லது கடத்துவது; (இ) எங்கள் சேவைகள் அல்லது சிஸ்டம்களுக்கு அங்கீகாரமற்ற அணுகலைப் பெறுவது அல்லது பெற முயற்சிப்பது; (ஈ) எங்கள் சேவைகளின் பாதுகாப்பு, பந்தோபஸ்து, இரகசியத்தன்மை, நம்பகத்தன்மை, கிடைப்பு அல்லது இயக்கத்தில் தலையிடுதல் அல்லது தடங்கல் ஏற்படுத்துதல்; (உ) அங்கீகாரமற்ற அல்லது தானியங்கியான வழிமுறைகள் மூலம் எங்கள் சேவைகளுக்கான கணக்குகளை உருவாக்குதல்; (ஊ) எங்கள் பயனர்களின் அல்லது அவர்களைப் பற்றிய தகவல்களை எவ்வொரு அனுமதியற்ற அல்லது அங்கீகாரமற்ற முறையிலும் சேகரிப்பது; (எ) எங்கள் சேவைகளை அல்லது எங்களிடமோ எங்கள் சேவைகளிலிருந்தோ பெறப்படும் தரவுகளை அங்கீகாரமற்ற முறையில் விற்பது, மறுவிற்பனை செய்வது, வாடகைக்கு விடுவது அல்லது அவற்றுக்குக் கட்டணம் விதிப்பது; (ஏ) நாங்கள் எங்கள் சேவைகள் வழியே வெளிப்படையாக வழங்கியுள்ள கருவிகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட முறையில் தவிர மற்றபடி, ஒரே சமயத்தில் பல சாதனங்களால் பயன்படுத்த முடியும் ஒரு நெட்வொர்க்கில் எங்கள் சேவைகளை விநியோகிப்பது அல்லது கிடைக்கச் செய்வது; (ஐ) நடைமுறையளவில் எங்கள் சேவைகளைப் போலவே செயல்படும் மென்பொருள் அல்லது API-களை உருவாக்கி ஓர் அங்கீகாரமற்ற முறையில் அவற்றை மூன்றாம் தரப்பினர்களின் பயன்பாட்டுக்காக வழங்குவது; அல்லது (ஒ) மோசடியான அல்லது அடிப்படையற்ற புகார்களை அல்லது முறையீடுகளைச் சமர்ப்பிப்பது போன்று, புகாரளிக்கும் வழிகளைத் தவறாகப் பயன்படுத்துவது.
உங்கள் கணக்கைப் பாதுகாத்தல். உங்கள் சாதனம் மற்றும் உங்கள் WhatsApp கணக்கை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைத்திருப்பது உங்கள் பொறுப்பு, மேலும் உங்கள் கணக்கு அல்லது எங்கள் சேவைகளின் அங்கீகாரமற்ற பயன்பாடு அல்லது பாதுகாப்பு மீறல் குறித்து உடனடியாக எங்களிடம் தெரிவிக்க வேண்டும்.
மூன்றாம் தரப்பு இணையதளங்கள், செயலிகள், உள்ளடக்கம், பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகள், Meta நிறுவனத் தயாரிப்புகள் ஆகியவற்றை அணுக, பயன்படுத்த அல்லது தொடர்புகொள்ள எங்கள் சேவைகள் உங்களை அனுமதிக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகளுடன் ஒருங்கிணைந்த மூன்றாம் தரப்பு தரவுக் காப்புப்பிரதி சேவைகளைப் (iCloud அல்லது Google Drive போன்றவை) பயன்படுத்தவோ அல்லது உங்கள் WhatsApp தொடர்புகளுக்குத் தகவல்களை அனுப்ப உதவும் மூன்றாம் தரப்பினரின் இணையதளத்தின் ‘பகிர்’ பொத்தானைப் பயன்படுத்தவோ நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த விதிமுறைகள் மற்றும் எங்கள் தனியுரிமைக் கொள்கை எங்கள் சேவைகளின் பயன்பாட்டிற்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் மூன்றாம் தரப்புத் தயாரிப்புகள் அல்லது சேவைகளையோ Meta நிறுவனத் தயாரிப்புகளையோ பயன்படுத்தும்போது, அவற்றின் விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளானவை அந்தத் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் உங்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும்.
உங்கள் உரிமைகள். உங்கள் WhatsApp கணக்கிற்காக அல்லது எங்கள் சேவைகள் மூலம் நீங்கள் சமர்ப்பிக்கும் தகவல்களுக்கு WhatsApp உரிமை கோரவில்லை. உங்கள் WhatsApp கணக்கிற்காக அல்லது எங்கள் சேவைகள் மூலம் நீங்கள் சமர்ப்பிக்கும் அத்தகைய தகவல்களுக்குத் தேவையான உரிமைகள் மற்றும் உரிமங்களை வழங்குவதற்கான உரிமை உங்களுக்கு இருக்க வேண்டும்.
WhatsApp-இன் உரிமைகள். எங்கள் சேவைகளுடன் தொடர்புடைய அனைத்துப் பதிப்புரிமைகள், வணிகக் குறிகள், களங்கள், இலச்சினைகள், வணிகம்சார் உடை, வர்த்தக ரகசியங்கள், காப்புரிமைகள் மற்றும் பிற அறிவுசார் சொத்துரிமைகளும் எங்களுக்கே சொந்தம். எங்கள் பதிப்புரிமை, வணிகக் குறிகள் (அல்லது இதே போன்ற குறிகள்), களங்கள், இலச்சினைகள், வணிகம்சார் உடை, வர்த்தக ரகசியங்கள், காப்புரிமைகள் அல்லது பிற அறிவுசார் சொத்துரிமைகளை எங்களுடைய வெளிப்படையான அனுமதி இன்றி மற்றும் எங்கள் பிராண்ட் வழிகாட்டுதல்களின் பிரகாரம் அன்றி நீங்கள் பயன்படுத்தக்கூடாது. எங்கள் துணை நிறுவனங்களின் வணிகக் குறிகளை அவர்களின் அனுமதியுடன் மட்டுமே பயன்படுத்தலாம், இதில் ஏதேனும் வெளியிடப்பட்ட பிராண்ட் வழிகாட்டுதல்களில் அங்கீகரிக்கப்பட்டதற்கு ஏற்ற அனுமதியும் உட்படும்.
WhatsApp-க்கான உங்கள் உரிமம். எங்கள் சேவைகளை இயக்குவதற்கும் வழங்குவதற்கும், நீங்கள் WhatsApp-க்கு உலகளாவிய, பிரத்தியேகமற்ற, உரிமைத்தொகை-இல்லாத, துணை உரிமம் அளிக்கக்கூடிய மற்றும் மாற்றத்தக்க உரிமத்தை பயன்படுத்த, வெளியிட, விநியோகிக்க, துணை ஆக்கங்களை உருவாக்க, காட்சிப்படுத்த (உள்ளடக்கம் உட்பட) எங்கள் சேவைகளில் அல்லது அதன் மூலம் நீங்கள் பதிவேற்றம், சமர்ப்பித்தல், சேமித்தல், அனுப்புதல் அல்லது பெறுதலுக்கான அனுமதியை வழங்குகிறீர்கள். இந்த உரிமத்தில் நீங்கள் வழங்கும் உரிமைகள் எங்கள் சேவைகளை இயக்குவதற்கும் வழங்குவதற்குமான நோக்கத்திற்காக மட்டுமே உள்ளன (உங்கள் சுயவிவரப் படம் மற்றும் நிலை மெசேஜைக் காண்பிக்க, உங்கள் மெசேஜ்களை அனுப்ப, மற்றும் வழங்கப்படாத மெசேஜ்களை நாங்கள் அவற்றை வழங்க முயற்சிக்கும்போது, எங்கள் சேவையகங்களில் 30 நாட்கள் வரை சேமிக்க எங்களுக்கு அனுமதிப்பது போன்றவையாகும்).
WhatsApp உங்களுக்கு வழங்கும் உரிமம். எங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டும் அதன் பிரகாரமும், எங்கள் சேவைகளைப் பயன்படுத்த ஒரு வரையறுக்கப்பட்ட, திரும்பப்பெறக்கூடிய, பிரத்தியேகமற்ற, துணை உரிமம் பெறமுடியாத மற்றும் மாற்ற முடியாத உரிமத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். இந்த உரிமம் எங்கள் விதிமுறைகளால் அனுமதிக்கப்பட்ட முறையில் எங்கள் சேவைகளைப் பயன்படுத்த உங்களுக்கு உதவும் ஒரே நோக்கத்திற்காக உள்ளது. உங்களுக்கு வெளிப்படையாக வழங்கப்பட்ட உரிமங்கள் மற்றும் உரிமைகளைத் தவிர, வேறு எந்த உரிமங்களும் உரிமைகளும் உங்களுக்குச் சூசகமாகவோ மற்றபடியோ வழங்கப்படுவதில்லை.
மூன்றாம் தரப்புப் பதிப்புரிமை, வணிகக்குறி அல்லது பிற அறிவுசார் சொத்து மீறல்கள் சார்ந்த கோரிக்கைகள் குறித்து புகாரளிக்க, தயவுசெய்து எங்கள் அறிவுசார் சொத்து கொள்கையை பார்க்கவும். மற்றவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை நீங்கள் தெளிவாக, தீவிரமாக அல்லது மீண்டும் மீண்டும் மீறினால் அல்லது சட்டக் காரணங்களுக்காக செய்யும் தேவை இருந்தால், நாங்கள் உங்கள் கணக்கை முடக்குவது அல்லது நிறுத்தி வைப்பது உட்பட உங்கள் கணக்கு குறித்து நடவடிக்கை எடுக்கலாம். உங்கள் கணக்கை முடக்குவது அல்லது நிறுத்தி வைப்பது கீழேயுள்ள “நிறுத்துதல்” பகுதிக்கு ஏற்ப அமைந்திருக்கும்.
நீங்கள் எங்கள் சேவைகளை உங்கள் சொந்த பொறுப்பின் பேரிலும், பின்வரும் பொறுப்புத்துறப்புகளுக்கு உட்பட்டும் பயன்படுத்துகிறீர்கள். விற்பனை சார்ந்த உத்தரவாதங்கள், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான தகுதி, தலைப்பு, அத்துமீறல் இன்மை, மற்றும் கணினி வைரஸிலிருந்து விடுபடுதல் அல்லது பிற தீங்கான நிரல் ஆகியவை மட்டுமின்றி அவையும் உள்ளிட்ட எவ்வித வெளிப்படையான அல்லது மறைமுகமான உத்தரவாதங்களும் இன்றி நாங்கள் எங்கள் சேவைகளை “உள்ளது உள்ளபடி” என்ற அடிப்படையில் வழங்குகிறோம். எங்களால் வழங்கப்பட்ட எந்தவொரு தகவலும் துல்லியமானது, முழுமையானது அல்லது பயனுள்ளதாக இருக்கும், எங்கள் சேவைகள் செயல்படும், பிழையின்றி இருக்கும், பாதுகாப்பாக இருக்கும் அல்லது எங்கள் சேவைகளானது இடையூறுகள், தாமதங்கள் அல்லது குறைபாடுகள் இல்லாமல் செயல்படும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை. எங்கள் பயனர்கள் எங்கள் சேவைகளை எவ்வாறு அல்லது எப்போது பயன்படுத்துகிறார்கள் என்பதையோ அல்லது எங்கள் சேவைகள் வழங்கும் அம்சங்கள், சேவைகள் மற்றும் இடைத்தளங்களையோ நாங்கள் கட்டுப்படுத்துவதில்லை மற்றும் அவற்றுக்குப் பொறுப்பேற்பதில்லை. எங்கள் பயனர்கள் அல்லது பிற மூன்றாம் தரப்பினரின் செயல்கள் அல்லது தகவல்களை (உள்ளடக்கம் உட்பட) கட்டுப்படுத்த நாங்கள் பொறுப்பல்ல மற்றும் கடமைப்பட்டிருக்க மாட்டோம். எந்த மூன்றாம் தரப்பினர்களுக்கு எதிராகவும் நீங்கள் வைக்கும் எவ்வொரு கோரிக்கை சார்ந்த, அதிலிருந்து எழுகின்ற அல்லது எவ்விதத்திலும் அதனுடன் தொடர்புகொண்ட, அறியப்பட்ட அல்லது அறியப்படாத எவ்வொரு கோரிக்கை, புகார், நடவடிக்கைக்கான காரணம், சர்ச்சை, பிணக்கு அல்லது பாதிப்புகள் (மொத்தமாக “கோரிக்கைகள்”) ஆகியவற்றிலிருந்தும் எங்களையும், எங்கள் துணை நிறுவனங்களையும், சார்பு நிறுவனங்களையும், எண்களின் மற்றும் அவர்களின் இயக்குனர்களையும், அதிகாரிகளையும், ஊழியர்களையும், கூட்டாளர்களையும், முகவர்களையும் (மொத்தமாக “WhatsApp தரப்பினர்கள்”) விடுவிக்கிறீர்கள். எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதன் விளைவாக பொருந்தக்கூடிய உங்கள் நாட்டின் சட்டங்கள் அல்லது வசிக்கும் பிரதேசத்தின் சட்டங்கள் அதை அனுமதிக்காவிட்டால், WhatsApp தரப்பினர்கள் தொடர்பான உங்கள் உரிமைகள் மேலே கூறப்பட்ட மறுப்பு மூலம் மாற்றப்படாது. நீங்கள் யுனைடெட் ஸ்டேட்ஸில் வசிப்பவர் என்றால், கலிஃபோர்னியா சிவில் கோட் §1542, அல்லது வேறு எந்த அதிகார வரம்பு அல்லது வேறு எந்த அதிகார வரம்புக்கும் உட்பட்ட எந்தவொரு உரிமைகளையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள்: அதாவது: ஒரு பொது வெளியீடு, கிரெடிட்டர் அல்லது வெளியிடும் கட்சி தனது அல்லது அவரிடம் இருப்பதை அறியவோ அல்லது ஆதரிக்கவோ இல்லை என்று கூறுவதற்கு விரிவாக்கம் செய்யாது, வெளியீட்டை நிறைவேற்றும் நேரத்தில், அல்லது அவர் அறிந்திருந்தால் அல்லது அவர் இங்கு கடனாளி அல்லது வெளியிடப்பட்ட கட்சியுடன் இருந்திருந்தால்.
ஏதேனும் இழந்த இலாபங்களுக்கு அல்லது தொடர்ச்சியான, விசேஷமான, தண்டிக்கக்கூடிய, மறைமுகமான, அல்லது எங்கள் விதிமுறைகள், எங்களுடன் அல்லது எங்கள் சேவைகளுடன் ஏதேனும் ஒரு வகையில் தற்செயலான சேதங்களைக் குறிக்கும், அதன் காரணமாக ஏற்படும் (எவ்வாறாயினும் மற்றும் கவனக்குறைவு உட்பட எந்த ஒரு பொறுப்புடைமைக் கோட்பாட்டின்படி ஏற்பட்டிருந்தாலும்), இதுபோன்ற சேதங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து WHATSAPP தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் கூட WHATSAPP தரப்பினர் பொறுப்பேற்கமாட்டார்கள். எங்கள் விதிமுறைகளுடன், எங்களுடன் அல்லது எங்கள் சேவைகளுடன் தொடர்புகொள்வதற்கான எந்தவொரு வழியிலும், வெளியேறுவது, அல்லது எங்களுடைய மொத்த பொறுப்பு, ஒரு நூறு டாலர்களின் ($ 100) மதிப்பை விடவோ அல்லது நீங்கள் ஏற்கனவே கடந்த பன்னிரண்டு மாதம் செலுத்தியுள்ள தொகையை விடவோ விட அதிகமாக இருக்காது . சில பாதிப்புகள் குறித்த மேற்படி பொறுப்புத் துறப்பு மற்றும் பொறுப்புடமை வரம்பு பொருந்தக்கூடிய சட்டத்தின் அதிகபட்ச அனுமதிக்கு உட்பட்டு பொருந்தும். சில மாநிலங்களின் சட்டங்கள் அல்லது அதிகார வரம்புகள் சேதங்களை விலக்குவது அல்லது கட்டுப்படுத்துவதை அனுமதிக்காது, எனவே சில அல்லது எல்லாவற்றையும் தவிர்த்து, வரம்புகள் உங்களுக்குப் பொருந்தாது. எங்கள் விதிமுறைகளில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், WHATSAPP பகுதிகளின் பொறுப்பு, பொருந்தக்கூடிய சட்டத்தின் முழு அனுமதிக்கு உட்பட்டே இருக்கும்.
உங்கள் செயல்கள், தகவல்கள், அல்லது WhatsApp-இல் உள்ள உள்ளடக்கம் அல்லது எங்கள் சேவைகளின் வேறு ஏதேனும் உங்கள் பயன்பாடு தொடர்பாக ஏதேனும் ஒரு நபர் எங்களுக்கு எதிராக ஒரு உரிமைகோரலைக் ("மூன்றாம் தரப்பு உரிமைகோரல்") கொண்டு வந்தால், நீங்கள், பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றுடன் தொடர்புடைய, அதிலிருந்து ஏற்படும் அல்லது ஏதேனும் ஒரு வகையில் இணைந்திருக்கும் அனைத்து பொறுப்புகள், சேதங்கள், இழப்புகள் மற்றும் எந்த வகை செலவினங்களிலிருந்தும் (நியாயமான சட்ட ரீதியான கட்டணங்கள் மற்றும் செலவுகள் உட்பட) WhatsApp தரப்பினரைப் பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவிற்கு, பொறுப்புறுதி வழங்குவீர்கள் மற்றும் பாதிப்படையாமல் வைத்திருப்பீர்கள்: (அ) எங்கள் சேவைகளுக்கான அணுகல் அல்லது பயன்பாடு, அதனுடன் வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் உள்ளடக்கம் உட்பட; (ஆ) எங்கள் விதிமுறைகள் அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தை நீங்கள் மீறுவது; அல்லது (இ) நீங்கள் முன்வைத்த ஏதேனும் போலி அடையாளங்கள். எந்தவொரு மூன்றாம் தரப்பு உரிமைகோரலின் பாதுகாப்பு அல்லது தீர்வுக்கும் எங்களால் தேவைப்படும் அளவுக்கு நீங்கள் முழுமையாக ஒத்துழைப்பீர்கள். எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதன் விளைவாகப் பொருந்தக்கூடிய உங்கள் நாட்டின் அல்லது வசிக்கும் பிராந்தியத்தின் சட்டங்கள் அனுமதிக்காவிட்டால், WhatsApp தரப்பினர்கள் தொடர்பான உங்கள் உரிமைகள் மேற்படி பொறுப்புறுதி மூலம் மாற்றம் அடையாது.
மன்றம் மற்றும் இடம். நீங்கள் அமெரிக்கா அல்லது கனடாவில் அமைந்துள்ள ஒரு WhatsApp பயனராக இருந்தால், கீழேயுள்ள “அமெரிக்கா அல்லது கனடா பயனர்களுக்கான சிறப்பு நடுவர் ஏற்பாடு” பிரிவு உங்களுக்கு பொருந்தும். தயவுசெய்து அந்த பகுதியை கவனமாகவும் முழுமையாகவும் படிக்கவும். கீழேயுள்ள “யுனைடெட் ஸ்டேட்ஸ் அல்லது கனடா பயனர்களுக்கான சிறப்பு நடுவர் ஏற்பாடு” பிரிவுக்கு நீங்கள் உட்பட்டிருக்கவில்லை எனில், WhatsAppக்கு எதிராக, எழும் அல்லது எந்தவொரு விஷயத்திலும் உங்களிடம் உள்ள எந்தவொரு கோரிக்கையும் அல்லது நடவடிக்கைக்கான காரணமும் இருப்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். எங்கள் விதிமுறைகள் அல்லது எங்கள் சேவைகளுடன், மற்றும் உங்களுக்கு எதிராக WhatsApp கோப்புகளை கோருவதற்கான எந்தவொரு உரிமைகோரலுக்கும் அல்லது காரணத்திற்காகவும், இதுபோன்ற எந்தவொரு உரிமைகோரல் அல்லது நடவடிக்கைக்கான காரணமும் (ஒவ்வொன்றும், ஒரு “சர்ச்சை” மற்றும் ஒன்றாக, “தகராறுகள்” என்பதை நீங்களும் WhatsApp உம் ஒப்புக்கொள்கிறீர்கள்) கலிபோர்னியாவின் வடக்கு மாவட்டத்திற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் அல்லது கலிபோர்னியாவின் சான் மேடியோ கவுண்டியில் அமைந்துள்ள ஒரு மாநில நீதிமன்றத்தில் பிரத்தியேகமாக தீர்க்கப்படும், மேலும் இதுபோன்ற எந்தவொரு கோரிக்கையையும் வழக்குத் தொடுக்கும் நோக்கத்திற்காக அத்தகைய நீதிமன்றங்களின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு சமர்ப்பிக்க ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லது நடவடிக்கைக்கான காரணம், மற்றும் கலிஃபோர்னியா மாநிலத்தின் சட்டங்கள் சட்ட விதிகளின் முரண்பாடுகளைப் பொருட்படுத்தாமல் அத்தகைய எந்தவொரு கோரிக்கையையும் அல்லது நடவடிக்கைக்கான காரணத்தையும் நிர்வகிக்கும். மேற்கூறியவற்றுக்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல், எங்கள் சொந்த விருப்பப்படி, நாங்கள் உங்களிடம் உள்ள எந்தவொரு தகராறையும் தீர்ப்பதற்கு நாங்கள் தேர்வு செய்யலாம், இது நீங்கள் வசிக்கும் நாட்டில் எந்தவொரு தகுதிவாய்ந்த நீதிமன்றத்திலும் நடுவர் உட்பட்டது அல்ல.
கட்டுப்படுத்தும் சட்டம். கலிபோர்னியா மாநிலத்தின் சட்டங்கள் எங்கள் விதிமுறைகளையும், நீதிமன்றத்தில் அல்லது நடுவர் மன்றத்தில் உள்ள எந்தவொரு சர்ச்சையையும் நிர்வகிக்கின்றன, அவை WhatsApp-க்கும் உங்களுக்கும் இடையில் எழக்கூடும், சட்ட விதிகளின் முரண்பாடுகளைப் பொருட்படுத்தாமல் கட்டுப்படுத்துகின்றன.
கோரிக்கை அல்லது பிணக்கை முன்வைப்பதற்கான கால வரம்பு. ஒரு கோரிக்கையை அல்லது பிணக்கை முன்வைக்க உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால வரம்பையும் இந்த விதிமுறைகள் கட்டுப்படுத்துகின்றன. இதில், பொருந்துகிற சட்டத்தின் அனுமதிக்கு முழுமையாக உட்பட்டு, ஒரு பிணக்குத் தீர்த்தலை அல்லது அனுமதியிருப்பின் ஒரு நீதிமன்ற நடவடிக்கையை அல்லது சிறு உரிமைகோரல் நடைமுறையை தொடங்குவதற்கான காலமும் அடங்கும். எந்தவொரு பிணக்குக்கும் (கீழே வரையறுக்கப்பட்டுள்ள விலக்கப்பட்ட பிணக்குகள் தவிர), அந்தப் பிணக்கு முதலில் எழுந்த ஒரு வருடத்திற்குள் நாங்களும் நீங்களும் கோரிக்கைகளை (ஒரு பிணக்குத் தீர்த்தல் நடைமுறையைத் தொடங்குவது உட்பட) முன்வைக்க வேண்டும் என்பதற்கு நாம் சம்மதிக்கிறோம்; இல்லையெனில், அந்தப் பிணக்கு நிரந்தரமாக ரத்து செய்யப்படும். அப்படியென்றால், சர்ச்சை முதலில் எழுந்த ஒரு வருடத்திற்குள் நாங்களோ நீங்களோ உரிமைகோரலை (நடுநிலைத் தீர்ப்பு நடவடிக்கையை தொடங்குவது உட்பட) முன்வைக்கவில்லை என்றால், மிகவும் தாமதமாகத் தொடங்கப்பட்ட காரணத்துக்காக நடுநிலைத் தீர்ப்பு நடவடிக்கை தள்ளுபடி செய்யப்படும்.
கீழே காண்க: அமெரிக்கா அல்லது கனடா பயனர்களுக்கான சிறப்பு நடுநிலைத் தீர்ப்பு ஏற்பாடு
எங்கள் சேவைகளின் கிடைக்கும் தன்மை. நாங்கள் எப்போதும் எங்கள் சேவைகளை மேம்படுத்த முயற்சிக்கிறோம். அதாவது, எங்கள் சேவைகள், அம்சங்கள், செயல்பாடுகள் மற்றும் சில சாதனங்கள் மற்றும் தளங்களின் ஆதரவை நாங்கள் விரிவாக்கலாம், சேர்க்கலாம் அல்லது அகற்றலாம். பராமரிப்பு, பழுதுபார்ப்பு, மேம்பாடுகள் அல்லது நெட்வொர்க் அல்லது உபகரணங்கள் தோல்விகள் உட்பட எங்கள் சேவைகளில் தடங்கல் ஏற்படலாம். சில அம்சங்கள் மற்றும் சில சாதனங்கள் மற்றும் தளங்களுக்கான ஆதரவு உள்ளிட்ட எங்கள் சேவைகளில் சில அல்லது எல்லா நேரங்களையும் நாங்கள் எந்த நேரத்திலும் நிறுத்தலாம். எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள், இயற்கையின் நிகழ்வுகள் மற்றும் பிற எதிர்பாராத சூழ்நிலைக்குரிய நிகழ்வுகள் போன்றவை எங்கள் சேவைகளைப் பாதிக்கலாம்.
எங்கள் விதிமுறைகளின் எழுத்துக்களையோ அல்லது தாத்பரியத்தையோ நீங்கள் மீறினால் அல்லது எங்களுக்கு, எங்கள் பயனர்களுக்கு அல்லது பிறருக்கு தீங்கு, ஆபத்து அல்லது சாத்தியமான சட்ட வெளிப்பாட்டை உருவாக்கினால், இதுபோன்ற எந்த காரணத்திற்காகவும் எப்போது வேண்டுமானாலும் எங்கள் சேவைகளுக்கான உங்கள் அணுகலை அல்லது பயன்பாட்டை நாங்கள் மாற்றியமைக்கலாம், நிறுத்திவைக்கலாம் அல்லது நிறுத்தலாம். உங்கள் கணக்கு பதிவுசெய்த பிறகு செயலில் இல்லாவிட்டாலும் அல்லது நீண்ட காலத்திற்கு செயலற்ற நிலையில் இருந்தாலும் நாங்கள் அதை முடக்கலாம் அல்லது நீக்கலாம். WhatsApp உடனான உங்கள் உறவின் எந்தவொரு நிறுத்தத்தையும் பின்வரும் சட்ட விதிகள் தக்கவைக்கும்: “உரிமங்கள்,” “மறுப்பு மற்றும் விடுவிப்பு,” “பொறுப்பின் வரம்பு,” “இழப்பீடு,” “சர்ச்சைத் தீர்வு,” “எங்கள் சேவைகளின் கிடைக்கும்தன்மை,” “மற்றவை,” மற்றும் “அமெரிக்கா அல்லது கனடா பயனர்களுக்கான சிறப்பு நடுவர் தீர்ப்பாய விதி.”
இந்த பகுதியை கவனமாகப் படிக்கவும், ஏனெனில் இது எங்கள் அமெரிக்கா மற்றும் கனடா பயனர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய கூடுதல் ஏற்பாடுகளைக் கொண்டது. அமெரிக்கா அல்லது கனடாவில் நீங்கள் ஒரு WHATSAPP பயனராக இருந்தால், நீங்கள் மற்றும் நாங்கள் தனித்துவமான பங்களிப்பைச் சமர்ப்பிக்கவும், அனைத்து விவாதங்களையும் சமர்ப்பிக்கவும் சம்மதிக்கிறோம். இது ஒரு நீதிபதி அல்லது நீதிபதிக் குழு மூலம் நீதிமன்றத்தில் தீர்க்கப்பட்ட பல விவாதங்களைக் கொண்டிருப்பதற்கான உங்கள் உரிமையை நீங்கள் கைவிடுகிறீர்கள். இறுதியாக, நீங்கள் உங்கள் சொந்த நடத்தைக்கு மட்டுமே உரிமை கோரலாம், மேலும் எந்தவொரு உத்தியோகபூர்வ அல்லது பிற நபரின் அல்லது மக்களின் வர்க்கத்தின் உரிமைக்காகவும் அல்ல. பங்கேற்பதற்கான அல்லது உங்கள் விவாதத்தைக் கேட்கவும் தீர்க்கவும், ஒரு வகுப்பு நடவடிக்கை, ஒரு வகுப்பு ஆர்பிட்ரேஷன், அல்லது ஒரு பிரதிபலிப்பு நடவடிக்கைக்கான உங்கள் உரிமையை நீங்கள் விட்டு கொடுக்கிறீர்கள்.
“விலக்கப்பட்ட சர்ச்சை” என்பது உங்கள் அல்லது எங்கள் அறிவுசார் சொத்துரிமைகளை (பதிப்புரிமை, வர்த்தக முத்திரைகள், களங்கள், லோகோக்கள், வர்த்தக உடை, வர்த்தக ரகசியங்கள் மற்றும் காப்புரிமைகள் போன்றவை) அல்லது எங்கள் சேவைகளில் தலையிட அல்லது ஈடுபடுவதற்கான முயற்சிகள் தொடர்பான எந்தவொரு தகராறையும் குறிக்கிறது. எங்கள் சேவைகள் அங்கீகரிக்கப்படாத வழிகளில் (எடுத்துக்காட்டாக, தானியங்கி வழிகள்). தெளிவுபடுத்தலுக்காகவும், மேற்கூறியவை இருந்தபோதிலும், உங்கள் தனியுரிமை மற்றும் விளம்பர உரிமைகள் தொடர்பாக, எழும் அல்லது எந்த வகையிலும் அந்த சர்ச்சைகள் விலக்கப்பட்டவை அல்ல.
கூட்டாட்சி நடுவர் சட்டம். யுனைடெட் ஸ்டேட்ஸ் ஃபெடரல் ஆர்பிட்ரேஷன் சட்டம் இந்த “யுனைடெட் ஸ்டேட்ஸ் அல்லது கனடா பயனர்களுக்கான சிறப்பு நடுவர் ஏற்பாடு” பிரிவின் விளக்கம் மற்றும் அமலாக்கத்தை நிர்வகிக்கிறது, இதில் WhatsAppக்கும் உங்களுக்கும் இடையிலான ஒரு தகராறு நடுவர் நிலைக்கு உட்பட்டதா என்ற கேள்வி உட்பட.
யுனைடெட் ஸ்டேட்ஸ் அல்லது கனடாவில் அமைந்துள்ள WhatsApp பயனர்களுக்காக நடுவர் ஒப்பந்தம். அமெரிக்கா அல்லது கனடாவில் வசிக்கும் WhatsApp பயனர்களுக்கு, நீக்கப்பட்ட பிணக்குகளைத் தவிர்த்து, அனைத்துப் பிணக்குகளுக்கும் நீதிபதி அல்லது நீதிபதிக் குழு விசாரிக்கும் உரிமையை தள்ளுபடி செய்ய WhatsApp மற்றும் நீங்கள் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் தனியுரிமை மற்றும் விளம்பர உரிமைகள் தொடர்பாக, எழும், அல்லது எந்த வகையிலும் உட்பட, அனைத்துப் பிணக்குகளும் (விலக்கப்பட்ட பிணக்குகளைத் தவிர) இறுதி மற்றும் கட்டாய பிணக்குத் தீர்த்தல் மூலம் தீர்க்கப்படும் என்பதை WhatsApp மற்றும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். WhatsApp மற்றும் நீங்கள் எங்கள் விதிமுறைகளின் கீழ் நடுநிலைத் தீர்ப்பு நடவடிக்கைக்கு உட்பட்ட ஒரு சர்ச்சையை எங்கள் விதிமுறைகளின் கீழ் நடுநிலைத் தீர்ப்பு நடவடிக்கைக்கு தகுதியற்ற ஒரு சர்ச்சையுடன் இணைக்க மாட்டோம் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.
நீங்கள் ஒரு சர்ச்சைக்கு நடுநிலைத் தீர்ப்பு நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன், ஓர் எழுத்துப்பூர்வமான சர்ச்சைத் தீர்வுக்கான அறிவிப்பை எங்களுக்கு வழங்க வேண்டும், அதில் உங்கள் (அ) பெயர்; (ஆ) வீட்டு முகவரி; (இ) பயனர்பெயர்; (ஈ) உங்கள் WhatsApp கணக்கிற்குப் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் எண்; (உ) சர்ச்சை குறித்த ஒரு விரிவான விளக்கம்; (ஊ) நீங்கள் கோரும் நிவாரணம் ஆகியவை அடங்கியிருக்க வேண்டும். நீங்கள் எங்களுக்கு அனுப்பும் எந்தவொரு சர்ச்சைத் தீர்வுக்கான அறிவிப்பையும் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்: Meta Platforms, Inc., கவனத்திற்கு: WhatsApp நடுநிலைத் தீர்ப்பு நடவடிக்கை தாக்கல், 1601 Willow Rd. Menlo Park, CA 94025. பிணக்குத் தீர்த்தலை தொடங்குவதற்கு முன்னர், நீங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியில் அல்லது பொருத்தமான பிற வழிகளில் பிணக்கு அறிவிப்பை அனுப்புவோம். முறையிடல் அறிவிப்பைப் பெற்ற முப்பது (60) நாட்களுக்குள் முறையிடலைத் தீர்க்க முடியவில்லை எனில், நீங்களோ அல்லது நாங்களோ நடுநிலை தீர்ப்பைத் தொடங்கலாம்.
மத்தியஸ்தம் தொடங்கப்பட்ட நேரத்தில் நடைமுறைக்கு வரும் வகையில் அதன் வர்த்தக நடுவர் விதிகளின் கீழ் அமெரிக்க நடுவர் சங்கம் (“AAA”) மத்தியஸ்தம் நிர்வகிக்கப்படும்.அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான விருப்ப விதிகள் மற்றும் நுகர்வோர் தொடர்பான தகராறுகளுக்கான துணை நடைமுறைகள் (ஒன்றாக , “AAA விதிகள்”). பிணக்குத் தீர்த்தலுக்கு, AAA விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மத்தியஸ்தர் தலைமை தாங்குவார். AAA விதிகள், ஒரு பிணக்கைத் தொடங்குவது குறித்த தகவல், பிணக்குத் தீர்த்தல் நடைமுறை குறித்த விவரிப்பு ஆகியவை www.adr.orgஎன்ற தளத்தில் உள்ளன. பிணக்குத் தீர்த்தல் அம்சத்தின் வரம்பு மற்றும் நிறைவேற்றம் தொடர்பான விவகாரங்களை நீதிமன்றமே முடிவு செய்யும். பிணக்குத் தீர்த்தலுக்கான இடம் மற்றும் அத்தகைய பிணக்குத் தீர்த்தலுக்கான கட்டணங்கள் மற்றும் செலவுகள் ஒதுக்கீடு AAA விதிகளின்படி தீர்மானிக்கப்படும்.
விலகல் நடைமுறை. பிணக்குத் தீர்த்தலுக்கான இந்த ஒப்பந்தத்தை விட்டு நீங்கள் வெளியேறலாம். நீங்கள் அவ்விதம் செய்தால், நீங்கள் அல்லது நாங்கள் இருவருமே மற்றவரை பிணக்குத் தீர்த்தல் நடவடிக்கையில் பங்கெடுக்க வைக்கவேண்டிய அவசியமில்லை. விலக, பின்னால் கொடுக்கப்பட்டதில் பிந்தையதாக இருப்பதன் 30 நாட்களுக்குள் போஸ்ட்மார்க் செய்யப்பட்டு எழுத்துப்பூர்வமாக எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்: (அ) எங்கள் விதிமுறைகளை நீங்கள் முதலில் ஏற்றுக்கொண்ட தேதி; மற்றும் (ஆ) இந்த பிணக்குத் தீர்த்தல் நீங்கள் உட்பட்ட தேதி. நீங்கள் வெளியேறுவதற்கு இந்த முகவரியைப் பயன்படுத்த வேண்டும்:
WhatsApp LLC
Arbitration Opt-Out
1601 Willow Road
Menlo Park, California 94025
United States of America
நீங்கள் சேர்க்க வேண்டியவை: (i) உங்கள் பெயர் மற்றும் வீட்டு முகவரி; (ii) உங்கள் கணக்கு சார்ந்த மொபைல் எண்; மற்றும் (iii) பிணக்குத் தீர்த்தலுக்கான எங்கள் விதிமுறைகளின் சம்மதத்திலிருந்து விலக விரும்புகிறீர்கள் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடும் ஓர் அறிக்கை.
சிறிய கோரிக்கைகள் நீதிமன்றம். பிணக்குத் தீர்த்தலுக்கு மாற்றாக, உங்கள் உள்ளூர் “சிறிய கோரிக்கைகள்” நீதிமன்ற விதிகளால் அனுமதிக்கப்பட்டால், ஒரு தனிப்பட்ட (வகுப்பு சாராத) அடிப்படையில் இந்த விஷயம் முன்னேறும் வரை, உங்கள் உள்ளூர் “சிறிய கோரிக்கைகள்” நீதிமன்றத்திற்கு உங்கள் பிணக்கை நீங்கள் கொண்டு வரலாம்.
அமெரிக்கா அல்லது கனடாவில் உள்ள பயனர்களுக்கு வகுப்புசார் நடவடிக்கைகள், வகுப்புசார் பிணக்குத் தீர்த்தல்கள் அல்லது பிரதிநிதித்துவ நடவடிக்கைகள் எதுவும் இல்லை. நீங்கள் அமெரிக்கா அல்லது கனடாவில் உள்ள ஒரு WhatsApp பயனராக இருந்தால், நம்மில் ஒவ்வொருவரும் மற்றவருக்கு எதிராக பிணக்குகளை அதன் அல்லது உங்கள் சார்பாக மட்டுமே கொண்டு வர முடியும் என்பதை ஏற்கிறோம், வேறு எந்த நபரின் அல்லது நிறுவனத்தின் சார்பாகவும் அல்ல, அல்லது எந்தவொரு வகுப்புசார் மக்கள் சார்பாகவும் அல்ல. ஒரு வகுப்புசார் நடவடிக்கை, வகுப்பு தழுவிய பிணக்குத் தீர்த்தல், ஒரு தனியார் தலைமை வழக்கறிஞர் அல்லது பிரதிநிதித்துவ தகுதி ஆகியவற்றில் கொண்டுவரப்பட்ட பிணக்குகள், அல்லது எந்தவொரு பிணக்கு தொடர்பாக வேறு எந்த நபரும் அல்லது நிறுவனமும் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைந்த பிணக்குகளில் பங்கேற்க வேண்டாம் என்று நம்மில் ஒவ்வொருவரும் ஏற்கிறோம். ஏதேனும் குறிப்பிட்ட பிணக்கை (அல்லது குறிப்பிட்ட நிவாரணத்துக்கான கோரிக்கை), இந்தப் பிரிவின் வரம்புகளுக்கு இணங்க பிணக்குத் தீர்த்தலுக்கு உட்படுத்த முடியாது என்ற இறுதியான நீதிமன்றத் தீர்ப்பு இருந்தால், அந்தப் பிணக்கை (அல்லது நிவாரணத்துக்கான அந்தக் கோரிக்கை) மட்டும் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லலாம். மற்ற அனைத்துப் பிணக்குகளும் (அல்லது நிவாரணத்துக்கான கோரிக்கைகள்) இந்தப் பிரிவிற்கு உட்பட்டிருக்கும்.
அனுமதிக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகளை தாக்கல் செய்யும் இடம். சர்ச்சைத் தீர்வுக்கான ஒப்பந்தத்தில் இருந்து நீங்கள் விலகினால், உங்கள் சர்ச்சை ஒரு விலக்கப்பட்ட சர்ச்சையாக இருந்தால், அல்லது சர்ச்சைத் தீர்வு செயல்படுத்த முடியாதது எனக் கண்டறியப்பட்டால், மேற்படி “சர்ச்சைத் தீர்வு” என்ற பகுதியில் உள்ள பொருந்தக்கூடிய பிரிவுக்கு உட்பட நீங்கள் சம்மதிக்கிறீர்கள்.
வேறு சில மொழிகளில் எங்கள் விதிமுறைகளை அணுக, உங்கள் WhatsApp அமர்வுக்கான மொழி அமைப்பை மாற்றவும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழியில் எங்கள் விதிமுறைகள் இல்லை என்றால், அவை இயல்புநிலையாக ஆங்கிலப் பதிப்பில் இருக்கும்.
எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கும் பின்வரும் ஆவணங்களை மதிப்பாய்வு செய்யவும்:
WhatsApp தனியுரிமைக் கொள்கை
WhatsApp அறிவுசார் சொத்து குறித்தக் கொள்கை
WhatsApp பிராண்ட் வழிகாட்டல்கள்