
வீட்டுக்குப் பணம் அனுப்புவதாக இருந்தாலும் சரி, அத்தையின் பிறந்தநாள் பரிசுக்கான செலவைப் பகிர்ந்து கொள்வதாக இருந்தாலும் சரி, மதிய உணவுக்கான பில் தொகையை நண்பருடன் பகிர்ந்து கொள்வதாக இருந்தாலும் சரி, அனைத்தையும் WhatsApp வழியாகவே கட்டணமின்றி செய்து முடிக்கலாம்.
ஒவ்வொருமுறை பணம் அனுப்பும்போதும் யுபிஐ கடவு எண்ணைப் பயன்படுத்துங்கள். உங்கள் கார்டு அல்லது யுபிஐ கடவு எண் விவரங்களை WhatsApp சேமிக்காது.
உங்கள் வங்கிக் கணக்கை ஒருமுறை சேர்த்துவிட்டால் போதும், யுபிஐ சார்ந்த செயலிகளைப் பயன்படுத்தும் எவருக்கும் WhatsApp வழியாகப் பணம் அனுப்பலாம், அவர்களிடமிருந்து பணம் பெறலாம்.
உங்கள் பணப் பரிமாற்றங்களின் நிலையை அரட்டையில் இருந்தே உறுதிசெய்து கொள்ளலாம், முந்தைய பரிவர்த்தனைகளை பேமெண்ட்ஸ் அமைப்புகளில் பார்க்கலாம்.
பணம், வங்கிக் கணக்குகளுக்கு இடையே நேரடியாகப் பரிமாற்றப்படுகிறது. WhatsApp இல் உள்ள பேமெண்ட்ஸ் அம்சத்தை இந்தியாவில் BHIM UPI வழங்குகிறது, இதன் பேமெண்ட் கூட்டாளர்கள் இவற்றைச் செயல்படுத்துகிறார்கள்.